Breaking News

முதியோரை பராமரிக்கும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு..!!

முதியோரை பராமரிக்கும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு மசோதா நிறைவேற்றப்பட்டு, அது பணியாளர் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

Pay hike for elderly care workers

தன்னாட்சி அதிகாரம் கொண்ட நடுவரிடம் 200,000 குடியிருப்பு மற்றும் வீட்டுப் பராமரிப்புப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வுக் கோரி தொழிற்சங்கங்கள் வழக்கு முறையிட்டன. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து காமன்வெல்த் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

Pay hike for elderly care workers.இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த வேலைவாய்ப்பு மற்றும் பணியிட உறவுகளுக்கான அமைச்சர் டோனி பர்க், முதியோர் பராமரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் கொரோனா பெருந்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்காரணமாக அவர்களுடைய ஊதிய உயர்வுக்கான பிரச்னையை அடிக்கோடிட்டு காட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், தங்களுடைய அரசாங்கம் இந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிம்மை அளிக்கிறது. அவர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைசர் டோனி பர்க் கூறினார்.