ஆஸ்திரேலியாவின் பொதுத் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் சமயத்தில் தேசியளவில் புகழ்பெற்ற செண்ட்டர்களில் ஒன்றான பாலின் ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுது செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வானொலி நிகழ்ச்சியில் பேசிய அவர், இருமிக் கொண்டே தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார். வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவின் பரப்புரை பணியில் இருந்த போது தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என நிகழ்ச்சியில் அவர் சந்தேகம் தெரிவித்தார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், நான் ஊரடங்கு காலத்தில் தேர்தல் பரப்புரை செய்தேன். பல மாநிலங்களில் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் அமலில் இருந்தன. இருந்தும் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது எனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினார்.
கியூன்ஸ்லாந்து மாநிலத்தின் அதிகார சபைக்கு மீண்டும் அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் சிறியளவில் மட்டுமே உள்ளன. அதனால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.