Breaking News

ஆஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்தில் Rockhampton நகரில் பயணிகள் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்து : ஒருவர் பலி, இருவர் படுகாயம்

Passenger train collides with freight train in Rockhampton, central Queensland, Australia. one killed, two injured

மத்திய குயின்ஸ்லாந்து Rockhampton ன் நகரில் பயணிகள் மின்சார ரயில் ஒன்று தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் என்ஜின் மீது திடீரென மோதி விபத்து ஏற்பட்டது.

Rockhampton அருகே வெஸ்ட்வுட் பகுதியில் காலை 11.30 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது.
இதில் 43 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Passenger train collides with freight train in Rockhampton, central Queensland, Australia, one killed, two injuredமேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 43 வயது மதிக்கத்தக்க நபருக்கு கால் எலும்புகள் முறிந்து காயங்களுடன் Rockhampton மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் 47 வயதான ஆண் ஒருவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவரையும் அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

ரயில் விபத்து காரணமாக Capricorn Highway பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக விபத்து பிரிவு தடைய அறிவியல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ரயில்வே துறை சார்பிலும் விபத்து தொடர்பான விரிவான விசாரணை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3zH1fu4