Breaking News

ஓய்வூதியத் திட்டங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் : நவம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய பரிந்துரைகள் அமலாகிறது

ஓய்வூதிய திட்டங்களில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஒன்றை தற்போது ஆஸ்திரேலிய அரசு கொண்டு வந்துள்ளதாகவும் அது பரவலாக நல்ல பலனை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவர்கள் பணியாற்றும் இடங்களில் உரிய முறையில் பங்காற்ற வில்லை என்றாலோ அல்லது ஏதேனும் புகார்களில் தண்டனை பெற்று இருந்தாலும் அவர்களது நிதிகளை நிறுத்தி வைக்குமாறு நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் விருப்பம் மட்டுமே அல்ல என்றும் ஓய்வூதியத் திட்டங்களில் இருக்கும் பல்வேறு குளறுபடிகளை களையும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக
கூறப்பட்டுள்ளது.

Parliament approves changes to pension plans, New recommendations take effect on November 1புதிய நிதித் திட்டங்கள் மூலமாக ஓய்வூதிய காலத்தில் பெறும் பலன்கள் பல்வேறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் பணியாற்றும் காலத்தில் சூப்பர் நிதி என்கிற வகையில் ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒட்டுமொத்தமாக கணக்கிடப்பட்டு பணியாளர்களின் ஓய்வூதிய கணக்கில் சேர்க்கப்படும்.

அதேபோன்று நிறுவனங்களுக்கும் நிதி கையாளுதல் விவகாரத்தில் பணியாளரின் பணிக்காலம் அவரின் செயல்பாடு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு ஓய்வு பெறும் நேரத்தில் எந்தெந்த நிதிகளை வழங்கலாம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் ஆண்டறிக்கை அளிக்கப்படும் போது இது தொடர்பான விவரங்கள் அனைத்தும் 15 நிதி தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு அவற்றில் எத்தனை தொகுப்புகளுக்கு பணியாளர் தகுதி பெற்று இருக்கிறார் என்கிற விவரங்களையும் அதில் குறிப்பிட வேண்டும்.

கடந்த எட்டு ஆண்டுகளில் இருந்து இந்த புதிய திட்டத்திற்கான தரவுகள் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அக்டோபர் மாதத்தில் முதற்கட்ட விரிவான பட்டியல் வெளியாகும் என்றும் அதனை அடுத்து நவம்பர் 1ஆம் தேதி முதல் மாற்றப்பட்ட புதிய திட்டம் அமலுக்கு வரும் என்றும் ஓய்வூதிய துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3vGfpbA

leave a reply