Breaking News

ஆஸ்திரேலியாவில் முடக்க நிலையில் உள்ளவர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு : விரைவில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கலாகிறது

டெல்டா வகை வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாகாணங்களில் முடக்க நிலை அமலில் உள்ளது. இந்நிலையில் குழந்தை பிறப்புக்காக காத்திருக்கும் பல்வேறு நபர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது. அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்கப்படும் என்றும் வேலை இழந்திருந்தாலும், அவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சட்ட திருத்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய சட்டத்தில் 13 மாதத்தில் குறைந்தது பத்து மாதங்கள் பணியாற்றியிருக்க வேண்டும் என்றும், விடுப்புக்கும் பேறு காலத்திற்கும் 12 வாரம் இடைவெளி இருக்க வேண்டும் என்றும் இருந்து வந்தது.

Paid maternity leave for disabled people in Australia. The bill will soon be tabled in Parliamentஇந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாகாணங்களில் டெல்டா வகை வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் தொடர்ந்து முடக்க நிலை அமல்படுத்தப்பட்டு வீட்டிலிருந்தே வேலை செய்யும் திட்டம் அமலில் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு தரப்பினரும் பேறுகால விடுப்பு விண்ணப்பித்து இருக்கும் சூழலில் ஊதியத்துடன் வழங்க வேண்டும் என்றும் கோரி வந்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று மத்திய குடும்ப மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் இதற்கான சட்டத் திருத்த முன்வடிவு கொண்டு வந்துள்ளார். இது விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. பேறு காலத்தில் உள்ளவர்கள், தகுதி வாய்ந்தவர்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

கிரேட்டர் சிட்னியில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை முடக்க நிலை நீட்டிக்கப்பட்டுள சூழலில் அங்கு 14 ஆயிரம் குடும்பங்கள் பேறுகால ஊதியம் மற்றும் விடுப்பை தவறவிட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்நிலையில் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுமுறை விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு கொரோனா கால நிவாரணம் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

முடக்கு நிலை காரணமாக வேலை இழந்தவர்களுக்கு வாரத்துக்கு 750 டாலர்கள் நிவாரண தொகையாக வழங்கப்படுகிறது. மேலும் எட்டில் இருந்து 20 மணி நேரம் வரையில் வேலை இழந்தவர்களுக்கு 450 டாலரும் நிவாரணமாக அளிக்கப்படுகிறது.

Link Source: https://ab.co/3yppj2U