Breaking News

கருச்சிதைவு ஏற்படும் பெற்றோர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு : ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்டம் வழிவகை செய்கிறது

Paid leave for aborted parents. Australian government's new law paves way

கருச்சிதைவு ஏற்படும் பெண்களுக்கு கருணை அடிப்படையிலான ஊதியத்துடன் கூடிய
இரண்டு நாள் விடுப்பு வழங்க புதிய சட்டத்திருத்தம் அனுமதிக்கிறது. இதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுடன் இணைந்து இதற்கான சட்ட முன்வரைவு களை மேற்கொண்ட கருச்சிதைவு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாட்டாளர் Samantha Payne இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார்.

அதனடிப்படையில் 20 வாரங்களுக்கு முந்தைய கருச்சிதைவு ஏற்பட்ட நபர்களுக்கு ஊதியத்துடன் கூடிய இரண்டு நாள் விடுப்பு அளிக்கப்படும். இதற்கு முந்தைய செயல்பாட்டின் படி மருத்துவ விடுப்பு எடுத்தாலும் அவர்களது பணி நேரங்களை அவர்கள் முழுமையாக்கி தரவேண்டும் என்று இருந்தது. நீண்ட காலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அதே நேரத்தில் தாங்கள் நோயாளிகளாக கருதி இந்த விடுப்பை எடுக்கவில்லை என்றும் Samantha Payne கூறியுள்ளார்.

Paid leave for aborted parents. Australian government's new law paves way.இந்த சட்டத்திருத்தம் தொடர்பாக தனது தனிப்பட்ட கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ள குயின்ஸ்லாந்து லிபரல் எம்.பி Julian Simmonds, கருச்சிதைவு உள்ளிட்ட விவகாரங்கள் நரகத்தின் போரிடுவது போன்ற கொடுமையான நேரம் என்று விவரித்துள்ளார். குழந்தையின்மைக்காக IVF உள்ளிட்ட சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளும்போது அந்த நாட்களில் படும் வேதனைகள் சொல்லிமாளாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய மனைவி 10 ஆண்டுகால போராட்டத்தில் கருச்சிதைவு ஏற்பட்ட நாட்களில் பட்ட துயரம் அதனை தொடர்ந்து அவர் பணிக்கு சென்ற நாட்களை தான் நினைவு கூறுவதாகவும் Julian Simmonds கூறியுள்ளார்.

Fair பணிச் சட்டத்தின் கீழ் வரும் அனைவருக்கும் இந்த ஊதியத்துடன் கூடிய விடுப்பு பொருந்தும் என்றும் இது கருச்சிதைவால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மட்டு மல்லாமல் அவர்களின் துணையான கணவருக்கும் இது பொருந்தும் என்றும் செயற்பாட்டாளர் Samantha Payne கூறியுள்ளார். தாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சில தனியார் தொழில் நிறுவனங்கள் அமைப்புகள் இதுபோன்ற விடுப்புகளை கடந்த ஆண்டே வழங்க சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், தற்போதைய இந்த புதிய சட்டத்திருத்தம் பல்வேறு பெண்களுக்கு அவர்களது கணவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் Samantha Payne தெரிவித்துள்ளார்.

குழந்தையின்மைக்காக சிகிச்சை எடுப்பதும் அல்லது பேறு காலத்தில் கருச்சிதைவு ஏற்படுத்துவதும் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் நிலையில் அவர்களுக்கு இது போன்ற அறிவிப்புகள் ஆறுதலை தருகின்றன.

Link Source: https://ab.co/3xVCKaR