Breaking News

“Pacific Access Visa “ திட்டத்தை ஆஸ்திரேலியா அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது !

கால நிலை மாற்றத்தால் இடம்பெயர்ந்த Islanders-களுக்கு ஆஸ்திரேலியா புதிதாக Pacific Access Visa வழங்க வேண்டும் என புதிய கொள்கைகள் வலியுறுத்தியது.

தேசிய பேரிடர்களால் ஏற்பட்ட இடம்பெயர்தல் மற்றும் காலநிலை மாற்றம் இவற்றில் 80 சதவீதம் ஆசிய பசிஃபிக் பிராந்தியத்தில் 2008 மற்றும் 2018 க்கு இடையில் நடந்ததாக புதன் அன்று வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் pacific தீவில் இருப்பவர்களின் வருகைக்கு ஆஸ்திரேலியா தயாராக இருக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.இயற்கை பேரிடர் எற்படுவதற்கு முன்னரே முறையாக திட்டமிட்டு மக்களை இடம் பெயர உதவ வேண்டும் என எழுத்தாளர்கள் Jane McAdam மற்றும் Jonathan Pryke எழுதியுள்ளார்.

தற்போதுள்ள மனிதாபிமான விசா மூலம் அகதிகள் அஸ்திரேலியாவிற்கு வர வாய்ப்புகள் இருந்தாலும் இந்த கட்டமைப்பை மேலும் விரிவாக்க புதிய முறை விசா அறிமுகப்படுத்த வேண்டும் என அறிக்கை கூறுகிறது.

Pacific Island வாசிகள் மற்ற மாநிலங்களுக்குள் எளிதாக நடமாட முடியாத காரணத்தால் ஆஸ்திரேலிய அரசு அவர்களுக்கு Pacific Access Category Visa வழங்கவேண்டும்.

தற்போதுள்ள Seasonal Worker திட்டம் pacific மற்றும் Timor Leste மக்களை ஆண்டுக்கு ஒன்பது மாதங்கள் வேலை செய்ய அனுமதி வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏற்கனேவே 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்துள்ளனர்.

சர்வதேச எல்லைகள மூடப்பட்ட போதிலும் , ஆஸ்திரேலியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற எண்ணத்தில் ஆகஸ்ட் மாதம் இத்திட்டம் நிறுவப்பட்டது.

ஆஸ்திரேலியாவை ஒப்பிடுகையில் நியூசிலாந்து அரசு இந்த pacific access visa திட்டம் மூலம் Kribati, Tuvalu, Tonga மற்றும் Fiji ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் நிரந்தரமாக நாட்டில் குடியேற விண்ணப்பிக்க அனுமதிக்கிறது.வாக்குப்பதிவில் வெற்றி பெற்றால், விண்ணப்பதாரர்களும் அவர்களை சார்ந்தவர்களும் நிரந்தரமாகத் தங்கவும் , வேலை செய்யவும் ,படிக்கவும் அனுமதிக்கிறது.

இந்த விசா திட்டம் 75 Kiribati குடிமக்கள், 75 Tuvaluan குடிமக்கள்,250 Tongan குடிமக்கள் மற்றும் 250 Fijian குடிமக்கள் குடியேற அனுமதிக்கிறது.Cook தீவுகள், Niue மற்றும் Takelau ஆகியவற்றில் வசிப்பவர்கள் தாமாகவே நியூசிலாந்தின் குடிமக்களாக கருதப்படுவார்கள்.