Breaking News

தென் ஆஸ்திரேலியாவின் 9 மாவட்டங்களுக்கு ஒட்டுமொத்த தீ தடை : வலுவான வடகிழக்கு காற்று வீசக்கூடும் என்பதால் தீயணைப்புத்துறை எச்சரிக்கை

Overall fire ban for 9 districts in South Australia Fire department warns of strong northeast wind

இம்மாதங்களில்  வலுவான வடகிழக்கு காற்று வீசக்கூடும் என்பதால் தீ மூட்டுவதற்கான தடை விதிக்கப்படுவதாகவும், மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், மாநிலத்தின் ஏனைய பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் மாநில தீயணைப்புத்துறை பணி கமாண்டர் Scott Turner தெரிவித்துள்ளார்.

Fire Service Commander Scott Turnerமவுண்ட் லோப்டி மலைத்தொடர்கள் மிகவும் வறண்டுள்ளதாகவும், பெனிசுலா மாவட்டத்தின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகள் கடுமையாக மாசு பாதிப்பு அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தெற்கு ஆஸ்திரேலியாவின் பெரும்பகுதிகள் மழையின்றி கடுமையாக வறண்டுள்ளதாகவும் Scott Turner கூறியுள்ளார். வரவிருக்கும் நாட்களை எதிர்கொள்ள எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலையுதிர்காலத்தில் தீ தடையை அரசு முழுவதும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், 2019 ம் ஆண்டில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 2021ல் மீண்டும் தடை விதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. தென் ஆஸ்திரேலியா பகுதிகளில் தொடர்ந்து வானிலை மாற்றம் என்பது இருக்கும் என்றும், அசாதரண சூழலை கண்டு எவரும் அஞ்ச வேண்டாம் என்றும் Scott Turner கேட்டுக்கொண்டுள்ளார். 000 – (மூன்று பூச்சியம்) என்ற அவசர எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.