Breaking News

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : 8 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி – 77 ரன்களுடன் தோல்வியின்றி களத்தில் நின்ற மிட்செட் மார்ஷ்

Over 20 World Cup Cricket. Australia win the trophy by 8 wickets - Mitchell Marsh unbeaten on 77

துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரின் அதிரடி பந்துவீச்சால் தடுமாறிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

Over 20 World Cup Cricket. Australia win the trophy by 8 wickets - Mitchell Marsh unbeaten on 77.173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 7 பந்துகள் மீதிமிருந்த நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 சிக்ஸர், 6 பவுண்டரி என 50 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்த மிட்செட் மார்ஷ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 3 சிக்ஸர், 4 பவுண்டரி உடன் 38 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்த டேவிட் வார்னர் தொடர் நாயகனாக தேர்வானார். 120 பந்துகளில் 172 ரன்களை சேஸ் செய்தது சாதாரண காரியமல்ல என்றும், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த போட்டியில் ஆஸ்திரேலியா தனது திறமையை நிருபித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து 2010ம் ஆண்டு இங்கிலாந்திடம் தோற்ற வரலாற்றை ஆஸ்திரேலியா மாற்றி எழுதி விட்டதாகவும் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பாட் கம்மின்ஸ், மிட்ஷெல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட், டேவிட் வார்னர், ஸ்வீட் ஸ்மித் ஆக 5 பேரும் டெஸ்ட் தொடரின் சிறந்த வீரர்கள் என்ற நிலையில் இவர்களை கெண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Over 20 World Cup Cricket. Australia win the trophy by 8 wickets - Mitchell Marsh unbeaten on 77...ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வார்னர், மார்ஷ் இருவரின் அற்புதமான பேட்டிங்தான் காரணம். பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட், ஆடம் ஸம்ப்பா இருவரும்தான் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஹேசல்வுட் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டு வீழ்த்தினார். ஸம்ப்பா 4ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை சாய்த்தார். டேவிட் வார்னர் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக 289 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் சேர்த்த மேத்யூ ஹேடன்(2007), பீட்டர்ஸன்(2010), ஆகியோரின் சாதனையை வார்னர் முறியடித்துவிட்டார்.

நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை முதல் 10 ஓவர்களில் ரன் ஏதும் பெரிதாகச் சேர்க்காமல் வீணடித்துவிட்டனர். 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். ஆனால் கடைசி 10 ஓவர்களில்தான் அதிரடியாக ஆடி 115 ரன்கள் சேர்த்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மார்ட்டின் கப்தில் 35 பந்துகளில் 28 ரன்களும், மிட்ஷெல் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஆனால், ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஆடியதால் சீராக ரன்ரேட் உயர்ந்தது. பவர் ப்ளேயில் 43 ரன்கள், 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது ஆஸ்திரேலிய அணி.

Link Source: https://ab.co/3cdJ84A