Breaking News

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் முடக்கநிலைக்கு எதிராக வெடித்த போராட்டம் : அதிதீவிர தொற்று பரவல் மையமாக உருவெடுத்த சோகம்

டெல்டா வகை வைரஸ் பாதிப்பால் தீவிரமாக அவதியுற்று வரும் நிலையில் சிட்னியில் நடைபெற்ற முடக்க நிலைக்கு எதிரான போராட்டம் அதி தீவிர தொற்று பரப்பும் நிகழ்வாக மாறியிருக்கிறது. சிட்னி நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தொற்று பாதிப்பு காரணமாக முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முடக்க நிலை காரணமாக வீடுகளில் ஒன்று கூடுவதற்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனிடையே முடக்க நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிட்னியில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர் இந்தப் போராட்டம் அதிதீவிரமாக தொடரை பரப்பும் ஒரு நிகழ்வாக மாறி இருப்பது மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக காவல்துறை அமைச்சர்
கூறியுள்ளார்.

Outbreak of anti-freeze protest in Sydney, Australia, Tragedy centered on outbreak.ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி பல மணி நேரத்திற்கு சாலையில் பேரணியாக நடந்து சென்றதாகவும் இதில் 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Surry Hills பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 36 வயதான இரண்டு இளைஞர்கள் போராட்டத்தின்போது காவல்துறையின் குதிரைகளை தாக்கியதாக அவர்கள் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் போராட்டத்தில் பங்கு பெற்றவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதமாக பங்கேற்றது தெரியவந்துள்ளது.

Greater சிட்னி, Blue Mountains, Central Coast, Wollongong மற்றும் Shellharbour உள்ளிட்ட இடங்களில் கடந்த நான்கு வாரங்களுக்கு மேலாக முடக்க நிலை அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது.

Outbreak of anti-freeze protest in Sydney, Australiaஇதனிடையே அம் மாகாணத்தில் புதிதாக 163 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முடக்க நிலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்து இவர்களில் யாரேனும் ஒருவருக்கு தொற்று பாதிப்பு இருந்தாலும் நிலைமை எந்த அளவுக்கு மோசமாகும் என்று காவல் துறை அமைச்சர் David Elliott குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இதுபோன்று ஓரிடத்தில் ஒன்றுகூடி இருப்பது பெருமளவு தொற்று பாதிப்பு பரவுவதற்கான வழியை ஏற்படுத்தும் என்று தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் Catherine Bennett கூறியுள்ளார். போராட்டத்தில் பங்கெடுத்து அவர்களில் பெரும்பாலானோர் முகக் கவசம் அணியாமலும் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் பங்கேற்றது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே முடக்க நிலைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தால் கட்டுப்பாடுகள் இன்னும் கடுமையாகும் என்றும் சட்டத்திற்கு புறம்பாக போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரீமியர் Gladys Berejklian எச்சரித்துள்ளார்.

Link Source: https://ab.co/3i1KO4M