Breaking News

உலகின் மிக நீண்ட பொது முடக்க பாதிப்பில் இருந்து இன்னும் விக்டோரிய மக்கள் மீளவில்லை என்று எதிர்கட்சி தலைவர் மேத்தியூ காய் தெரிவித்துள்ளார்.

விக்டோரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1903 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 7 நபர்கள் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். AFLW வீரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Opposition leader Matthew Coy said the Victorian people had not yet recovered from the world's longest-running general paralysis...விளையாட்டு வீரருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பயிற்சியை ரத்து செய்துள்ள ரிச்மண்ட் கால்பந்து கிளப் நிர்வாகம், அடுத்த உத்தரவு வரும் வரை அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது. கால்பந்தாட்ட வீரர்கள் அங்கிகரீக்கப்பட்ட பணியாளர்களாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளாதால், குறைந்தபட்ச ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பயிற்சிக்கும் திரும்ப முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியாவில் தற்போது 22,327 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்டா வைரஸூக்கு இதுவரை 152 பேர் உயிரிழந்துள்ளனர்.

விக்டோரியாவில் 16 வயதை கடந்தவர்களில் 89.2% ஒரு டோஸ் தடுப்பூசியும், 66.5% இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

12-15 வயதுடையவர்களில் 75% பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகவும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ஜெரோம் வெய்மர் தெரிவித்துள்ளார்.

விக்டோரியா மாகாணத்தில் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்தால் 7 நாட்கள் தனிமையே போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தாததவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம் என்றும் மாகாண அரசு அறிவித்துள்ளது.

Opposition leader Matthew Coy said the Victorian people had not yet recovered from the world's longest-running general paralysis..இந்த வார இறுதியில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படுவதை முன்னிட்டு, வர்த்தகர்களுக்கு 2000$ உதவித்தொகை வழங்க சிறுதொழில் வளர்ச்சி துறை அமைச்சர் Jaala Pulford தெரிவித்துள்ளார். இதற்காக சுமார் 54.5$ மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் மேத்யூ காய், மிக நீண்ட ஊரடங்கால் ஏராளமான விக்டோரிய வாசிகள் வேலையை இழந்து தவிப்பதாகவும், வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை அரசு கண்டும் காணாமல் இருப்பதாகவும், மக்களை பாதிப்பில் இருந்து மீட்பது அரசின் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Link Source: https://ab.co/3aOZ7VU