Breaking News

Northern Territory மாகாணத்தில் தடுப்பூசி செலுத்தாத உள்நாட்டு பயணிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் தளர்வு : எந்தவித அறிவிப்பும் இன்றி அரசு தன்னிச்சையாக செயல்படுவதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

Northern Territory மாகாணத்தில் தடுப்பூசி செலுத்தாத உள்நாட்டு பயணிகளும் வரலாம் என்றும் அதற்கான தடை முழுவதுமாக நீக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தரப்பில் சுகாதாரத்துறையில் நிழல் அமைச்சராக உள்ள Bill Yan இது தொடர்பான அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் பாராளுமன்றத்திலும் இது குறித்த எந்தவிதமான ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

வெள்ளியன்று மாலை திடீரென உள்நாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் முழுவதும் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது என்றும் இதனை பின்னர் முதலமைச்சர் அலுவலகம் தரப்பில் உறுதி செய்யப்பட்டதாகவும் Bill Yan கூறியுள்ளார். அதேநேரத்தில் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையிலேயே தாங்கள் அறிந்து கொண்டதாகவும் இது தொடர்பாக தங்களுக்கு எந்த விதமான அறிவிப்பும் அரசின் சுகாதாரத் துறையின் தரப்பிலிருந்து யாரும் முன் வந்து அறிவிப்பை தெரிவிக்கவில்லை என்றும் Bill Yan புகார் கூறியுள்ளார்.

Opposition alleges that the government is acting arbitrarily without any notice. relaxation in the admission of non-vaccinated domestic travelers in the Northern Territory.சுகாதாரத்துறை அமைச்சர் தரப்பில் இருந்து குறிப்பிட்ட காரணங்களுக்காக உள்நாட்டு பயணிகளுக்கான தடை நீக்கப்படுவதாக தங்களிடம் விளக்கமளித்து இருந்தால், அந்த காரணங்களை ஏற்றுக் கொண்டு அரசின் முடிவுகளை ஆதரிப்பதில் தங்களுக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்றும் எதிர்க்கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று பரவல் மாகாணம் முழுவதும் இருந்தாலும் கோவிட் 19 தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் உள்நாட்டு பயணிகளுக்கான தடையை தற்போது நீக்கி இருப்பதாகவும் இந்த நடவடிக்கைகள் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து படிப்படியாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்றும் அரசின் செய்தித் தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார். வாழ்த்துகள்

அரசின் நடவடிக்கைகள் தேவையான ஒன்று என்றாலும் மாகாணத்திலுள்ள பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு இந்த தடை தொற்றுப் பரவலுக்கான காரணமாக அமைந்து விடக்கூடாது என்றும், அதுவே மாகாணத்தின் வளர்ச்சிக்கு தடையாக மாறிவிடக்கூடாது என்றும் Bill Yan கவலை தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் முன் களப்பணியாளர்கள், முதியோர் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் பணியாற்றுவோர், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவரும் போஸ்டர் தடுப்பூசியை மார்ச் 11-ம் தேதிக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக உள்நாட்டு பயணிகளின் வருகை எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3s6uMf6