Breaking News

விக்டோரியாவில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.

இது தொடர்பான தகவலை உறுதிபடுத்தி உள்ள விக்டோரியா காவல்துறை உயிரிழந்தவர் ப்ராங்ஸ்டன் நகரத்தை சேர்ந்த 37 வயதான நபர் என்பதை தெரிவித்துள்ளனர்.

Koo Wee Rup – McDonalds Drain Road East பகுதியில் உள்ள Ballarto சாலையில் விபத்து நடந்துள்ளதாக காலை 6.30 மணிக்கு அவரச சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த சாலையின் இடதுபுறம் தடுப்பில் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளகி இருந்தது.

வெள்ளை நிற போர்ட் ஸ்டேஷன் காரை ஓட்டி வந்த ப்ராங்ஸ்டன் நகரை சேர்ந்த 37 வயதான நபர் விபத்து நடந்த இடத்திலேயே உயரிழந்த்தாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கார்டினியா போக்குவரத்து போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும், காலை 4 மணி முதல் 6.30 மணிக்குள் மோர்வெல் – Koo Wee Rup பகுதியில் குறிப்பிட்ட வாகனம் கடந்து சென்றதை யாரேனும் பார்ந்திருந்தால் முன்வந்து தகவலை தெரிவிக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்த ஆண்டில் சாலை விபத்தில் 78 பேர் உயிரிழந்திருப்பதாக விக்டோரியா போலிசார் தங்களது வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://cutt.ly/Iv4AzNF