Breaking News

விக்டோரியாவில் ஒரு மில்லியன் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்கள் : அக்டோபர் 15-ம் தேதிக்குள் ஒரு டோஸ் தடுப்பூசி கட்டாயம் போட அறிவுறுத்தல்

One Million Authorized Workers in Victoria. Instructions to Get One Dose Vaccine by October 15

விக்டோரியாவில் கட்டுமானம் உள்ளிட்ட அத்தியாவசிய தொழில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு முதற்கட்டமாக 25% பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

இந்த பணிகளுக்காக அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அங்கீகரிக்கப்பட்ட அத்தியாவசிய பணியாளர்கள் முதல் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும், அடுத்ததாக நவம்பர் 26ஆம் தேதிக்குள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரீமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் அறிவுறுத்தியுள்ளார்.

One Million Authorized Workers in Victoria Instructions to Get One Dose Vaccine by October 15.கல்வி நிறுவனங்கள் கட்டுமான நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் முதல் கட்டமாக 25% பணியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதே நேரம் அவர்கள் குறைந்த பட்சம் ஒரு டோஸ் தடுப்பு ஊசி போட்டு இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கட்டுப்பாடுகள் மற்றும் தலைவர்கள் குறித்த அறிவிப்புகள் மிகவும் குழப்ப நிலையில் இருப்பதாகவும் பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் தடுப்பூசி உள்ளிட்ட காரணங்களால் பணிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயத் துறையினர் தெரிவித்துள்ளனர். அரசு உரிய அறிவிப்பை சரியான காலத்தில் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

One Million Authorized Workers in VictoriaMoorabool ஊரக பகுதியில் இன்று நள்ளிரவு முதல் முடக்க நிலை நடைமுறைக்கு வருகிறது. மேலும் கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளிப்பதன் மூலமாக தொழிலாளர்கள் அனுமதி இன்றி வேறு எந்த இடத்திற்கும் செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டாய தடுப்பூசி அறிவிப்பு காரணமாக பெரிய அளவிலான கட்டுமான தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கப் படுவதாகவும், இதன் காரணமாக நடைபெறும் போராட்டங்களின் விளைவாகவே விக்டோரியா உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் ப்ரீமியர் கூறியுள்ளார். அதேநேரம் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட வேண்டும் என்றால் தடுப்பூசி ஒன்றே தீர்வு என்ற முடிவில் அரசு உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Link Source: https://ab.co/3BclYpV