Breaking News

ஆஸ்திரேலியாவில் அகதிகளாக குடியேறுவதற்கு ஒரு லட்சம் ஆப்கானியர்கள் விண்ணப்பம் : மனிதாபிமான அடிப்படை விசாவுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் ஆப்கானியர்கள்

One lakh Afghans apply for refugee status in Australia. Afghans waiting to apply for a humanitarian basic visa

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் அங்கிருந்து லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் நிலை தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக வர ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் விசா கேட்டு விண்ணப்பதிருந்தனர்.

இந்நிலையில் தற்போது மனிதாபிமான அடிப்படையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானனோர் அகதிகளாக வருவதற்கு விண்ணப்பத்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தலைநகர் காபூலில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவுக்கு பின்னர் இந்த விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை சராசரியாக அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆகஸ்ட் மாதம் தொடங்கி ஆஸ்திரேலிய அரசு காபூலில் இருந்து விமானம் மூலமாக ஏராளமாக ஆப்கானியர்களை மீட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அதிக அளவிலான கோரிக்கை ஆஸ்திரேலியாவை நோக்கி எழுந்திருப்பதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் தூதர்கள் தெரிவித்துள்ளனர்.

One lakh Afghans apply for refugee status in Australia. Afghans waiting to apply for a humanitarian basic visa.ஆப்கானியர்கள் விவகாரத்தில் செனட் கமிட்டி முன்னதாக முன்னதாக உரையாற்றிய உள்நாட்டு விவகாரங்களுக்கான அதிகாரி David Wilden, ஆஸ்ரேலிய அரசுக்கு வெள்ளம் போல விசா கோரிக்கைகள் வந்து குவிவதாக தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் பேர் மனிதாபிமான விசாவுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் 26 ஆயிரம் விண்ணப்பங்கள் கூடுதலாக இருப்பதாகவும், ஒரே விசாவில் தங்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு சேர்த்து விண்ணப்பித்து இருப்பதாகவும் செனட் சபையில் David Wilden தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் தொடர்ந்து அங்கிருந்து தங்களது குடும்ப உறுப்பினர்களை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், காபூலில் இருந்து வெளியேற விருப்பம் இல்லாதாவர்களும் உள்ளதாக செனட் கமிட்டி தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் ஆண்டு தோறும் வழங்கப்படும் மனிதாபிமான அடிப்படையிலான அகதிகளுக்கான மீள் குடியேற்ற அனுமதியில் ஆப்கானியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், தேவையின் அடிப்படையில் அதிகரிப்பது தொடர்பாக உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர்கள் 286 பேர் ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிப்பதாகவும் அவர்களை மீட்கும் நடவடிக்கையும் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று செனட் சபை தெரிவித்துள்ளது.

Link Source: https://bit.ly/3BBU3jl