Breaking News

தெற்கு ஆஸ்திரேலியாவில் பரவலாகக் குறையத் தொடங்கி உள்ள ஒமைக்ரான் தொற்று : கட்டாயத் தடுப்பூசி உத்தரவை நீக்க வேண்டும் என அதிகரிக்கும் கோரிக்கை

Omicron infection on the decline in South Australia. Rising demand for repeal of compulsory vaccine

தெற்கு ஆஸ்திரேலியாவில் அவசர கால தேவையின் அடிப்படியில் விதிக்கப்பட்ட கட்டாயத் தடுப்பூசி உத்தரவுக்கு எதிராக பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு குறைவு, தேர்தல் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி கட்டாய தடுப்பூசி உத்தரவை அரசு நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கத் தொடங்கி உள்ளன.

Omicron infection on the decline in South Australia. Rising demand for repeal of compulsory vaccine.இந்நிலையில் தேர்தலில் போட்டியிட்டு வென்றார் மத சுதந்திரங்களுக்கான உரிமையை பாதுகாத்து உறுதி செய்யப்படும் என்றும், அதே நேரத்தில் தடுப்பூசியை புறக்கணிப்பதற்கான அதற்கான உரிமையை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் Family First கட்சியின் வேட்பாளர் Tom Kenyon உறுதி அளித்துள்ளார். முன்னாள் தொழிலாளர் கட்சி எம்பி மக்கள் தங்கள் நம்பிக்கைகளுக்கு வேலையை இழக்க மாட்டார்கள் என்று கூறி இருப்பதாகவும் தான் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் தன்னுடைய முதல் நடவடிக்கையே மத சுதந்திரத்திற்கான உரிமைகளை பாதுகாக்கும் மசோதாவாகத்தான் இருக்கும் என்றும் Tom Kenyon தெரிவித்துள்ளார்.

மசோதாவின் முழு நோக்கமே மக்கள் அவர்களுக்கான நம்பிக்கையின் அடிப்படையில் சுதந்திரமாக இயங்குவதற்கும் அதன் அடிப்படையில் அவர்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்வதும் தான் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். அதேநேரத்தில் மாற்று நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து அவர்களை பாதுகாக்கும் வகையிலும் மசோதா வடிவமைக்கப்படும் என்றும் Tom Kenyon கூறியுள்ளார்.

Omicron infection on the decline in South Australia. Rising demand for repeal of compulsory vaccine...பள்ளி ஒன்றில் பணியாற்றிய ஆசிரியை கட்டாய தடுப்பூசி உத்தரவை ஏற்க காரணத்தால் அவர் தனது வேலையை இழந்து விட்டதாகவும், இது போன்று தங்கள் நம்பிக்கைகளுக்காக இனி வரும் நாட்களில் மக்கள் யாரும் வேலையை இழக்காத வண்ணம் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்றும் Tom Kenyon உறுதி அளித்துள்ளார்.

உலகில் பெரும்பாலான நாடுகளில் கட்டாய தடுப்பூசி என்ற நடவடிக்கை படிப்படியாக குறைந்து வருவதாகவும், விருப்பத்தின் அடிப்படையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நடவடிக்கை பரவலாக பின்பற்றப்பட்டு வருவதாகவும் Family First கட்சி வேட்பாளர் Tom Kenyon கூறியுள்ளார்.

Omicron infection on the decline in South Australia. Rising demand for repeal of compulsory vaccine,கட்டாய தடுப்பூசி க்கு எதிராக தங்களது நிலைப்பாட்டை மேற்கொண்ட காவல்துறையினர், அரசு துறை பணியாளர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் வேலை இழந்து உள்ளனர். தடுப்பூசியை புறக்கணிப்பது அவர்களின் நம்பிக்கை சார்ந்த விவகாரம் என்றும் அதில் அரசு தலையிட முடியாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடிலெய்டில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கட்டாய தடுப்பூசி என்ற உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. நேரடி வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கான கட்டாய தடுப்பூசி உத்தரவில் தளர்வு ஏற்பட்டுள்ளதாகவும் வயது அதிகமான ஊழியர்கள் மற்றும் பேரசிரியர்களுக்கு மட்டுமே அந்த உத்தரவு பொருந்தும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3h5Tnud