Breaking News

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் மான் ஒன்றுக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி : அறுகுறிகளுடன் உள்ள மேலும் பல்வேறு வன விலங்குகளுக்கும் தொற்று பரிசோதனை

நியூயார்க் மாகாணத்தில் உள்ள Staten Island வனப்பகுதியில் 113 மான்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 15 சதவீதம் மான்களுக்கு வைரஸ் ஆன்டி பாடி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மான் ஒன்றுக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Omicron infection of deer confirmed in New York, USA.இதேபோன்று மேலும் சில விலங்குகளுக்கு தோற்று பாதிப்புக்கான அறிகுறிகள் இருப்பதாகவும் வனவிலங்கு மற்றும் சுகாதார ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அறிகுறிகள் தென்படும் வனவிலங்குகளுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சில விலங்குகளிடம் பரிசோதனை மேற் கொள்வதில் சிரமம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையில் விலங்குகள் மூலமாக பரவும் தொற்று புதியவகை தொற்றுக்கு வழி ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர்.

அதேநேரத்தில் இதுவரை விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கு பரவியதாக இதுவரை எந்த சான்றும் இல்லை என்றும், அது கொரொனா வைரசாக இல்லை என்றும் மற்றுமொரு பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

Omicron infection of deer confirmed in New York, USAமுதல்முறையாக விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு தோற்றுப் பரவியதில் நாய்களுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அந்தவகையில் நாய்களிடம் இருந்து தொற்று மனிதர்களுக்கு எளிதில் பரவும் வகையில் உள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். ஒன்று 60 வயதான முதியவர் ஒருவரிடம் இருந்து அவரது செல்லப்பிராணியான நாய்க்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று பூனைகளுக்கும் எளிதில் தொற்று பாதிப்பு பரவ வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதற்கு முன்னதாக Nadia பகுதியில் உள்ள Bronx இரியல் பூங்காவில் Malayan வகை புலி ஒன்றுக்கு கடந்த 2001 ஏப்ரல் மாதத்தில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடர் வறட்டு இருமல் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் புலிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில் உடனிருந்த மேலும் இரண்டு புலிகள் மற்றும் சிங்கங்களுக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதேபோன்று எலிகள் குரங்குகள் உள்ளிட்டவற்றுக்கு தொற்று பாதிப்பு பரவுவதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும் விலங்குகளிலிருந்து மற்ற விலங்குகளுக்கும் எளிதில் தொற்று பரவுவதற்கான அபாயம் இருப்பதாகவும் இது புதிய வகை தொற்று பரவலுக்கான வழியை எளிதில் ஏற்படுத்தும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Link Source: https://ab.co/3rIDHmC