Breaking News

ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் மாதம் முதல் பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை துரித்தப் படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Officials say the Pfizer vaccine drive in Australia will be expected from August.

ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி விநியோகம் குறித்து, பிரதமர் ஸ்காட் மோரிசன் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

வெளிநாடு பயணம் மேற்கொண்டதால் காண்பேரா வில் உள்ள தனியார் விடுதியில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், காணொளி முறையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது மாநிலங்களில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாடுகள் குறித்து பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டதாக மாநில முதல்வர்கள் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளனர்.

Officials say the Pfizer vaccine drive in Australia will be expected from August,இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தடுப்பூசி விநியோகத்திற்கான அதிகாரி Lt ஜெனரல் ஜான் பிரவன், பிரத்தமருடான ஆலோசனை கூட்டத்தில், தடுப்பூசி கையிருப்பு, விநியோகம், குறித்த முழுமையான விவரங்கள் மாநில முதல்வர்களுக்கு விளக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். தடுப்பூசிகான தேவை உலகம் முழுவதும் உள்ளதால், கையில் இருக்கும் தடுப்பூசியை கொண்டு சமாளிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார் .

Pifzer தடுப்பூசியின் கையிருப்பு ஆகஸ்ட் மாதம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ள ஜான், செப்டம்பர், அக்டோபர், மாதங்களில் இதன் எண்ணிக்கை உயரும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டத்தில் மாநிலங்களுக்கு அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசி விநியோகிக்க ஒப்புதல் கிடைத்தத்திருப்பதற்கு நியூ சவுத் வேல்ஸ் மாகண முதல்வர் கிலாடியஸ் பெர்ஜியாக்களின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அதே நேரம் பொது மருத்துவர்களும் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் பயன்படுத்த வேண்டும் என்றும் கிலாடியஸ் வலியுறுத்தியுள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் மாகணத்துக்கு கூடுதலாக 50000 பைசர் தடுப்பூசிகள் வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாத இறுதியில் 136 காமன் வெல்த் தடுப்பூசி மையங்களிலும், 40 பூர்வக்குடி சுகாதார மையங்களிலும் 1300 பொது மருத்துவர்களுகிக்கும் பைசர் தடுப்பூசி விநியோகிக்கப்படும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Officials say the Pfizer vaccine drive in Australia will be expected from Augustமேலும் ஆஸ்திரேலியாவில் 50-59 வயத்துக்குட்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்க முடிவு செய்திருப்பது மகிழ்ச்சியளித்தாலும், முதல் டோஸ் அஸ்டரா ஜெனிகா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், இரண்டாவது டோஸ் செலுத்த திரும்பாதது கவலையளிப்பதாக மருத்துவ சங்கத்தின் துணை தலைவர் கிறிஸ் மாய் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முதன்மை சுகாதாரத்துறை அதிகாரி பால் கெல்லி, முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசியை மாற்றி செலுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இது வரை சுமார் 65 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் வலியுறுத்தியுள்ளார்.

Link Source: https://bit.ly/3gSjzrp