Breaking News

மாகாணங்கள், பிராந்தியங்களுக்கான அக்டோபர் மாத ஃபைசர் தடுப்பூசி திட்டமிட்டபடி கிடைக்கும் : மீண்டும் உறுதி செய்தது காமன்வெல்த்

October Pfizer vaccine available for provinces and regions as scheduled. Commonwealth reaffirms

ஆஸ்திரேலியாவின் மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு இந்த ஆண்டு இறுதிவரை வலுவூட்டப்பட்ட தடுப்பூசிகள் கிடைப்பதற்கான கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் மாதத்திற்கான காய்ச்சல் தடுப்பூசி ஒதுக்கீடுகள் திட்டமிட்டபடி கிடைக்கும் என்று காமன்வெல்த் மீண்டும் உறுதி செய்துள்ளது.

புதிய அறிக்கையின் அடிப்படையில் இந்த மாதம் தொடங்கி முதல் டிசம்பர் மாதத்திற்குள் 9 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகள் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. விக்டோரியா மற்றும் ACT மாகாணங்களில் அடுத்த மாதத்திற்கான தடுப்பூசிகள் உரிய முறையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். கடந்து சில நாட்களில் திட்டமிட்ட வகையில் தங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.

October Pfizer vaccine available for provinces and regions as scheduled. Commonwealth reaffirms.ஃபைசர் நிறுவனத்தைப் பொறுத்தவரை தங்களுக்கு மத அடிப்படையிலான தடுப்பூசி ஒதுக்கீடுகளை செய்து வருவதாகவும், அவற்றை ஒவ்வொரு வாரத்தின் அடிப்படையில் அறிக்கையாக அவர்கள் சமர்ப்பித்து வருவதாகவும் அரசின் தடுப்பூசி குழுவைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல்
John Frewen கூறியுள்ளார். உலக அளவிலான விநியோகத்தை ஃபைசர் நிறுவனம் மேற்கொண்டு வருவதால் ஒரு சில கால தாமதம் ஏற்படுவதாகவும் இதை விரைவில் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் John Frewen உறுதி அளித்துள்ளார்.

பிரிட்டனில் இருந்து பெறப்படும் ஃபைசர் தடுப்பூசி தொகுப்பை பற்றாக்குறை ஏற்படும் மாகாணங்களுக்கு உடனடியாக பகிர்ந்து அளிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும், ஃபைசர் நிறுவனம் இனிவரும் காலங்களில் திட்டமிட்டபடி தடுப்பூசிகளை வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அக்டோபர் மாதத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீடு உறுதி தங்களுக்கு கிடைக்க பெற்றிருப்பதாகவும், இதன் அடிப்படையில் தடுப்புசி கிடைக்கும் பட்சத்தில் ஏற்கனவே முன்பதிவு செய்து வைத்திருப்பவர்களுக்கு உரிய முறையில் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் விக்டோரியா மாகாண செய்தித்தொடர்பாளர்
கூறியுள்ளார்.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மாகாணங்களுக்கான உரிய தடுப்பூசி ஒதுக்கீட்டை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அதே நேரத்தில் விக்டோரியா வைப் பொறுத்தவரை விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

9 மில்லியன் தடுப்பூசிகள் அடுத்த 3 மாதங்களுக்கு தலா 3 மில்லியன் தடுப்பூசிகள் ஆக ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்று காமன்வெல்த் தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3zAfFeg