Breaking News

Northern Territory ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்தது : கட்டாய மாஸ்க் பயன்பாடு உத்தரவு ஓரிரு நாட்களில் தளர்த்தப்படும் என அறிவிப்பு

Number of hospitalizations in Northern Territory is low. Mandatory mask use order to be relaxed in a couple of days

Northern Territory மாகாணத்தில் தொற்று பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை சராசரியாக குறையத் தொடங்கியுள்ளது.

இதனையடுத்து படிப்படியாக அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகளை ஏற்படுத்தியுள்ள மாகாண அரசு இன்னும் ஓரிரு நாட்களில் கட்டாய முக கவசம் என்ற உத்தரவில் தளர்வை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர்
Micheal Gunner வெளியிட்டுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 101 என்ற எண்ணிக்கை 96 ஆக குறைந்துள்ளது. நான்கு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து இன்னும் ஒருசில தினங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெறப்படும் என்றும் பொது இடங்களில் QR கோடு ஸ்கேன் செய்துவிட்டு செல்லவேண்டும் என்கிற உத்தரவும் நீக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Number of hospitalizations in Northern Territory is low. Mandatory mask use order to be relaxed in a couple of days.பண்பலை ரேடியோ ஒன்றுக்கு நேர்காணல் மூலம் தெரிவித்த முதலமைச்சர் Michael Gunner, எந்த நாள் என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாவிட்டாலும் விரைவில் இந்த உத்தரவுகள் கட்டாயம் திரும்பப் பெறப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொற்று பாதிப்பு மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இது உடனடியாக அதிகரிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று தலைமை மருத்துவ அதிகாரி வழங்கிய ஆலோசனையின் அடிப்படையிலேயே முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

சில பகுதிகளில் மட்டும் தொற்று பாதிப்பு உடையவர்கள் பயணம் செய்து வரும்போது அவர்கள் கியூ ஆர் கோட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய நடைமுறை பின்பற்றப்படும் என்றும் முதலமைச்சர் Michael Gunner குறிப்பிட்டுள்ளார்.

இடையே கடந்த 24 மணிநேரத்தில் 392 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதில் ஒன்பது பேருக்கு ஆக்சிஜன் இயற்கை சுவாசம் தேவைப்படுவதாகவும் தலைமை சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆன்டிஜென் ரேபிட் பரிசோதனை மூலமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து தொற்று பாதிப்பு கணிசமான எண்ணிக்கையில் பதிவாகி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3C0Sv3s