Breaking News

NSW-வில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

NSW- வில் கடந்த 24 மணி நேரத்தில், 17,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு பரி சோதனை மேற்கொண்டதில், புதியதாக 18 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளன. இதில் 9 பேர் Avalon பகுதியோடு தொடர்புடையவர்கள் என்றும், அங்கு தொற்று எண்ணிக்கை 138 ஆக அதிகரித்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் 6 நபர்கள் சிட்னியின் மேற்கு பகுதியில் உள்ள Croydon உடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளன. இவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி நடைபெறுகிறது என்றும் Ms. Berejiklian தெரிவித்துள்ளார். இங்கு ஏற்பட்ட தொற்று கவலைக்குரியதாக உள்ளதாகவும், நேரடி தொடர்பு இல்லாமல் தொற்று ஏற்ப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டன.

மேலும் தொற்று ஏற்பட்ட 3 நபர்களை பற்றிய விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்றும், அதில் ஒருவர் Northern Beaches உடனும், மற்றொருவர் Wollongong உடனும் சம்பந்தப்பட்டு உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த தொற்று பரவலினால் புத்தாண்டு கொண்டாட்ட கட்டுப்பாட்டு விதிகள் அதிகரிக்கக்கூடும் என அரசு அறிவித்துள்ளது. Greater Sydney-யில், வீடுகளில் கூடுவதற்கு 10 பேருக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வெளி அரங்குகளில் 50 பேர் கலந்து கொள்ளலாம் என்பது, தற்போது 30 ஆக குறைக்கப்பட்டுள்ளன. Northern Beaches-ல் வீடுகளில் 5 நபர்கள் மட்டுமே கூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Greater Sydney-யில் உள்ள Wollongong, the Central Coast உட்பட பல பகுதிகளில் 5 நபர்கள் மட்டுமே கூடலாம் என Mr. Berejiklian தெரிவித்துள்ளார். வெளிப்பகுதியில் இருந்து வரக்கூடிய யாருக்கும் Northern Beaches -க்குள் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Northern Beaches-க்குள் இந்த சமூக பரவலின் பின்புலம் அறியப்படாத ஒன்றாக இருப்பதால், பரவலின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்றும், வீடுகளில் மக்கள் கூடுவதில் ஆபத்து உள்ளது என்றும் NSW Chief Health Officer Dr.Kerry Chant தெரிவித்துள்ளார்.

Northern Beaches-ன் வெளிப்பகுதியில் தொற்று ஏற்பட்ட 3 நபர்களை பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கட்டுப்பாட்டு விதிகளை மீறுவோருக்கு $1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் NSW சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டுப்பாடு விதிகளை மீறியதாக இதுவரை 27 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது என Police Minister David Elliot தெரிவித்துள்ளார்.

Wollongong -ல் தொற்று ஏற்பட்ட நபர் டிசம்பர் 27ஆம் தேதி St. Nektarios மற்றும் The Holy Cross Church- களுக்கு சென்று வந்துள்ளதால், அங்கு சென்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. Figtree Shopping Centre, Mona vale மற்றும் Wollongong பகுதிகளுக்கு சென்று வந்தவர்களும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைவரும் தங்களுடைய தனிநபர் பொறுப்புணர்ந்து, தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்குமாறு Ms. Berejiklian கேட்டுக்கொண்டுள்ளார். புகழ்பெற்ற புத்தாண்டு தின கொண்டாட்ட பட்டாசு வெடித்தல் நிகழ்ச்சிகளை நேரடியாக பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைக்காட்சி நேரலையாக வீட்டிலிருந்தே அதை கண்டு ரசிக்குமாறும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் 3-வது Test-ஐ பார்வையிட 20,000 பேருக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது அது பாதியாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Northern Beaches-ல் வசிப்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட வீட்டிலேயே இருக்கும் உத்தரவு வரும் ஜனவரி 9ஆம் தேதி வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Peninsula தெற்குப் பகுதியில் வரும் ஜனவரி இரண்டாம் தேதி வரை ஊரடங்கு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.