Breaking News

NSW சென்ற இரண்டு விக்டோரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி !

NSW-விற்கு சென்ற 2 விக்டோரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுவதற்கு முன்பு அவர்கள் hotel மற்றும் Cafe-களுக்கு சென்றுள்ளனர் என்று NSW chief health officer Kerry Chant கூறியுள்ளார்.

இருவரும் இப்போது விக்டோரியாவில் திரும்பி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது , இது NSW-வில் ஏற்பட்ட தொற்றுகளுடன் சம்மந்தப்பட்டதாக நம்பப்படுகின்றது .

இந்த தொற்று குறித்து Victorian testing manager Jeroen Weimar கூறுகையில் ,இந்த புது தொற்றுகள் Black Rock,Buffalo Smile Thai restaurant-டுடன் தொடர்பு உள்ளது போல் இருப்பதாக அவர் கூறினார்.யாரென்று தெரியாத இவர்கள் இருவரும் அருகில் உட்கார்ந்து உணவு உண்டதனால் இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பாடு உள்ளதாக அவர் கூறினார் .

இந்த புது தொற்றை பற்றி தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக Health Minister Martin Foley கூறியுள்ளார் .ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட 8 புது தொற்றுகளுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று மரபணு சோதனை மூலம் அவர் உறுதி செய்தார்.

அந்த 8 தொற்றுகள் மற்றும் 170 முதன்மை தொற்றுகள் அனைத்தும் முக்கிய அக்கறை கொண்டவை என்றும், நூற்றுக்கணக்கான இரண்டாம் நிலை கொரோனா பாதிப்புகளுக்கு 14 நாட்கள் வரை சோதனை மற்றும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் Mr Weimar கூறியுள்ளார் .

புதிய தொற்றுகளுக்கும் ,முதன்மையான தொற்றுகளுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று விசாரணையின் முடிவில் தெரியவந்தால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.