Breaking News

NSW-வில் மேலும் ஐந்து கொரோனா தொற்று பதிவு !

NSW-வில் ஏழு புதிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது . அதில் ஐந்து உள்ளூரில் பதிவாகியுள்ளது.மற்ற இரண்டும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள வெளிநாட்டு பயணியரிடம் பதிவாகியுள்ளது.

புதிதாக வந்த சமூக பரவல் பாதிப்புகள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை, South west Sydney Oran park-ல் உள்ள Greater Beginnings Child care centre உடன் தொடர்புடையவை என்று கூறப்படுகின்றது . மற்றொரு பதிவு அவ்விடத்தில் பணிபுரியும் கல்வியாளர் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அக்டோபர் 2 முதல் கடந்த செவ்வாய் வரை Greater Beginnings-ல் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளும் ஊழியர்களும் கோவிட் பரிசோதனை மேற்கொண்டு இரண்டு வாரம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Oran park பள்ளி மாணவர் ஒருவருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்ட நிலையில்,அங்கு கோவிட் பரிசோதனை அதிகரித்துள்ளது.உயர் நிலை பள்ளிகளிலும் சில தொற்றுக்கான அடையாளம் காணப்பட்டன.பள்ளியில் விளையாட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஆசிரியர்களும் மாணவர்களும் சுய தனிமைப்படுத்துதலை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வார இறுதியில் விளையாடும் கூடைப்பந்து விளையாட்டும் மற்ற விளையாட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக NSW Education அறிக்கை வெளியிட்டு உள்ளது.வகுப்பறைகளும் சுத்தம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.

Lakemba Cluster உடன் தொடர்புடைய ஐந்து புதிய cases வெள்ளியன்று பதிவாகியுள்ளதாக NSW தெரிவித்தது.இந்த வார இறுதியில் வெளிபுற நிகழ்ச்சிகளுக்கு NSW சில தளர்வுககளை அறிவித்துள்ளது. ஒவ்வொரு இருக்கைக்கு மத்தியில் 4 மீட்டர் இடைவெளி விட்டு 500 பேர் திறந்தவெளி நிகழ்ச்சிகளில் பங்கு பெறலாம்.

வெளிப்புற உணவகங்களுக்கு தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.இதற்கிடையில் NSW அரசு Fiji-யை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட திறைமையான தொழிலாளர்களுக்கு நிபந்தனையுடன் ஒப்புதல் அளித்துள்ளது.முதல் வேலை சேர்ப்பு நவம்பர் மாத மத்தியில் நடைபெறும் என வேளாண் துறை அமைச்சர் Adam Marshall தெரிவித்தார்.

இங்கு வரும் தொழிலாளர்கள் கடும் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலை கடை பிடித்த பின்பே அனுமதிக்கப்படுவார் என அவர் திட்ட வட்டமாக தெரிவித்தார். இது மாநிலத்தின் உணவு விநியோகத்தை பாதுகாக்கும் முக்கியமான படி என்று திரு marshal தெரிவித்தார்.
தொழிற்சாலைகளுடன் நெருக்கமாக பணிசெய்து இந்த பேரிடரில் உழைப்பின் தேவையை புரிந்துகொண்டுள்ளோம் என அவர் தெரிவித்தார்.