Breaking News

NSW -வில் தொடர்ந்து நான்காம் நாளாக இன்றும் கொரோனா பாதிப்பு இல்லை !

கடந்த 24 மணி நேரத்தில் இரு வெளிநாட்டு பயணிகளிடம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது.இத்துடன் NSW-வில் கொரோனா தொற்று எண்ணிக்கை மொத்தம் 4031 ஆகும்.

செவ்வாய் அன்று ஒரே நாளில் 6381 பரிசோதனைகள் பதிவாகியுள்ளது. அதற்கு முந்தய நாள் 6353 ஆக இருந்தது.

மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சளி, இருமல் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனே பரிசோதனைக்கு வர வேண்டும்.

பள்ளிகளின் விடுமுறை வரும் வெள்ளி முதல் தொடங்குகிறது .இக்காலங்களில் பெரும் மக்கள் நடமாட்டம் இருப்பதால் நோய் பரிசோதனை மிகவும் அவசியம்.

NSW health இப்பொழுது 55 கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. அதில் 3 நபர் ICU வில் ventilator இல்லாமல் இருக்கிறார்கள். 84 சதவீத நோயாளிகளுக்கு மருத்துவமனைக்கு கொண்டு வராமல் வெளியிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தற்போது எண்ணிக்கை குறைந்ததால் நாம் கவனக்குறைவாக இருக்கக் கூடாது என Premier Gladys Berejiklian தெரிவித்துள்ளார்.