Breaking News

NSW-வில் ஆறு புதிய சமூகப் பரவல்கள் உறுதி -அதிகாரிகள் எச்சரிக்கை !

NSW-வில் 11 புதிய கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.அதில் ஆறு உள்ளூரில் ஏற்பட்டத்தொற்றுகள் .வியாழன் அன்று புதியதாகப் பதிவாகியுள்ள ஆறு சமூகப் பரவல்களில் நான்கு ஒரே cluster உடன் தொடர்புடையது.

ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பிறகும் ஐந்து புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .இதனால் NSWவின் மொத்த தொற்று எண்ணிக்கை 4,132 ஆகும்.

மேற்கு சிட்னியில் உள்ள Westfield Shopping Centre மற்றும் இரண்டு பயிற்சி தளங்களுக்கு வழங்கப்பட்ட சுகாதார எச்சரிக்கைக்கு பின்னர் இந்த புள்ளிவிவரங்கள் வந்துள்ளன.அக்டோபர் 8 மற்றும் 11 அன்று Auburn-ல் உள்ள Jabr Maths Turoring centre-க்கு சென்றவர்கள் உடனடியாக கோவிட் பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என NSW Health கூறுகிறது.

அதேபோல் அக்டோபர் 10 அன்று Parramattaவில் ACE Tutoring-ற்கு காலை 9:30 முதல் மதியம் 1:20 வரை வந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.அக்டோபர் 12 காலை 11:30 முதல் மதியம் 1 வரை Westfield Mount Druitt- ல் இருந்தவர்களும் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தபட்டு உள்ளது.

புதன் அன்று 13 கோவிட் தொற்றுகள் உள்ளதாக Premier Gladys Berejiklian அறிவித்தார். அவற்றில் இரண்டு ஹோட்டல் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் கண்டறியப்பட்டது.இது மிகவும் கவலை அளிப்பதாக premier தெரிவித்தார்.

திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பர்களின் எண்ணிக்கையை தளர்த்தலாம் என்ற முடிவை இப்பொழுது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என premier தெரிவித்துள்ளார்.

செவ்வாய் அன்று NSW அரசாங்கம் விருந்தோம்பல் கட்டுப்பாடுகளை தளர்த்தப்படும் என அறிவித்தது. திறந்தவெளி நிகழ்ச்சிகளில் நான்கு மீட்டர் இடைவெளி விட்டு 500 பேர் கலந்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டது.வெளிப்புற உணவு இடங்களுக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என அறிவித்தது.

சுகாதார அதிகாரிகள் நாள் ஒன்றுக்கு 20,000 பேருக்கு மேல் பரிசோதிக்கப்பட வேண்டும் என விரும்புவதாக NSW சுகாதார அமைச்சர் Brad Hazzard தெரிவித்தார்.