Breaking News

NSW-ல் பழங்குடி குழந்தைகள் strip searching-ஆல் குறிவைக்கப்படுகிறார்கள் !

கடந்த நிதியாண்டில் துயில் உரித்து தேடும் நடவடிக்கைகளில் பெரும்பாலும் பழங்குடியினர் குறிவைக்கப்பட்டுள்ளனர். அதிலும் 21 சதவீத மக்கள் 10 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள்.

2019-20 ஆம் ஆண்டில் 96 குழந்தைகள் Strip searching-கிற்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக, தகவல் பெறும் சட்டங்களின் கீழ் Redfern சட்ட மையத்தால் பெறப்பட்டது என்று போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டு முழுவதும் strip-search செய்யப்பட்ட எண்ணிக்கை 2.5 சதவீதம் ஆகும்.

ஆதிவாசிகள் மற்றும் Trotes strait Islander மக்களில் strip search செய்யப்பட்ட குழந்தைகள் 20 சதவீதம் உள்ளனர். கடந்த ஆண்டு இது 13 சதவீதமாக இருந்தது.

11 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீது ஏழு strip searches நடத்தப்பட்டுள்ளன. இது சட்டத்திற்கு உட்பட்டே நடந்ததாக காவல் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இது ஒரு தீவிரமான பிரச்சனை என்று Redfern சட்ட மையத்தின் வழக்கறிஞர் Sam Lee கூறினார்.மேலும் குழந்தைகள் மீது நடத்தப்படும் strip searching அவர்களை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிப்படையச் செய்வதாக தெரிவித்தார்.

NSW-வின் மொத்த மக்கள் தொகையில் 3.4 சதவீதம் மட்டுமே பழங்குடியினர் இருக்கும் சூழ்நிலையில். Strip search செய்யப்படுவதில் பழங்குடியினரின் சதவீதம் 9-ல் இருந்து 13 ஆக உயர்ந்துள்ளது.

ஆனால் 2019-20 ஆம் ஆண்டிற்கான மொத்த strip search எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 30 சதவீதம் குறைந்துள்ளது. 5,366-ல் இருந்து 3,750 ஆக குறைந்தது. கோவிட் தொற்றால் இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதே இதற்கு காரணம் என்று Ms Lee தெரிவித்தார்.

மேலும் ,இசை விழாக்களில் அதிகமாக செய்யப்பட்ட இந்த strip searches இப்பொழுது முதல் நாட்டு மக்கள் மத்தியில் அதிகமாக செய்யப்படுவது கவலை அளிப்பதாக அவர் கூறினார்.

Strip searches பற்றிய இறுதி அறிக்கையை ஆணைக்குழு இந்த ஆண்டு இறுதியில் வெளியிட உள்ளது.Law Enforcement (Powers and Responsibilities) Act 2002 சட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் அதிகாரியால் மட்டுமே Strip searches நடத்தப்பட வேண்டும்.

இந்த சட்டத்தின்படி பொதுமக்களின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு பாதுக்காப்பு இருக்க வேண்டும்.இதற்கு உட்பட்டே காவல்துறை செயல்பட வேண்டும்.

இதை கடைபிடிக்காத காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது .