Breaking News

NSWவில் தொடர்ந்து 6 நாட்களாக எந்த ஒரு புதிய நோய் தொற்றும் இல்லை..

கொரோனாவுக்கு விரைவில் பாய் பாய் சொல்ல இருக்கும் NSW!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தொடர்ந்து 6 நாட்களாக எந்த ஒரு புதிய நோய் தொற்றும் ஏற்படவில்லை. எனினும் புதன்கிழமை அன்று ஒருவருக்கு நோய்த்தொற்று உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் Gladys Berejiklian
அது புதிய நோய்த் தொற்று இல்லை, ஏற்கனவே பாதித்தவர் என தெளிவுபடுத்தியுள்ளார்.

ஏற்கனவே தொற்று ஏற்பட்டிருந்த அந்த நபர் மீண்டும் பரிசோதனைக்காக வந்ததை வைத்து, அவர் புதிய கொரானா நோயாளி என பரப்பப்பட்டுள்ளது என Gladys கூறியுள்ளார்.

சன்சைன் ஸ்டேட் 100 கிலோமீட்டர் வரை எல்லைகள் விரிவாக்கப்பட்டு உள்ளதால் சுமார் 150, 000க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் NSWவில் இருந்து குயின்ஸ்லாந்து செல்ல எந்த ஒரு தடையும் இல்லை.

வியாழக்கிழமை கணக்கெடுப்பின்படி குயின்ஸ்லாந்தில் வாசிப்பவர்களுக்கு எந்த ஒரு புதிய தொற்றும் இல்லை மேலும் அவர்கள் இப்பொழுது வடக்கு நியூ சவுத் வேல்ஸ் வரை செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நியூ சவுத் வேல்ஸில் இருந்து குயின்ஸ்லாந்திற்கு பழைய எல்லை வழியாக வருபவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தங்களது சொந்த செலவில் தனிமை படுத்திகொண்டு இருக்க வேண்டும்.

இனி எந்த ஒரு எல்லைகளிலும் கட்டுப்பாடுகள் இருக்கக்கூடாது அனைத்தையும் முற்றிலுமாக நீக்க வேண்டும் என கூறிய Ms. Berejiklianக்கு பதில் அளிக்கும் விதமாக Queensland Premier Annastacia Palaszczuk, NSW வில் தொடர்ந்து 28 நாட்கள் எப்பொழுது எந்த ஒரு கொரானா தொற்றும் இல்லாமல் இருக்கிறதோ அப்பொழுது நாங்கள் கட்டுப்பாடுகளை நீக்குகிறோம் என அவரது பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இவ்வாறு அனைத்து நாட்டு எல்லைகளில் இருக்கும் கட்டுப்பாடுகளை முற்றிலுமாக நீக்க வேண்டும் எனக் கூறிய Ms Berejiklian இப்பொழுது
கடும் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு உள்ள நிலையில் , அம்மாநிலத்தின் பல பகுதிகளில் இப்பொழுது படிப்படியாக புதிய நோய் தொற்றுகள் குறைந்து வருகிறது

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சுமார் 13, 575 பேருக்கு பரிசோதிக்கப்பட்டதில் வெளிநாடுகளிலிருந்து NSW க்கு வந்தவர்களில் நான்கு பேருக்கு புதிதாய் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. மேலும் NSW இப்பொழுது தொடர்ந்து 6 நாட்களாக எந்த ஒரு புதிய நோய்த்தொற்றும் இல்லாமல்
உள்ளது.

எனினும் கடந்த புதன்கிழமை Ms Berejiklian கூறியதாவது NSW வில் பல பகுதிகள் சிறப்பாக செயல்பட்டு வந்த போதிலும், சமீபத்தில் பெய்த மழையால்
வருகின்ற விடுமுறை நாட்களில் நல்ல
அறுவடை செய்யலாம் எனக் கூறியுள்ளார்.