Breaking News

20வது க்ராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று நோவக் ஜோகோவிச் சாதனை : ரோஜர் பெடரர், ரபேல் நடால் வரிசையில் இணைந்த ஜோகோவிச்

க்ராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள நோவக் ஜோகோவிச், 7 வது வரிசையில் உள்ள இத்தாலி வீரர் Matteo Berrettini -ஐ 6-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன் மூலம் புதிய சாதனையை படைத்துள்ள ஜோகோவிச், விம்பிள்டனை அதிக முறை வென்ற வீரர்களில் 4வது இடத்தில் உள்ளார். 34 வயதான ஜோகோவிச் 20 வது முறையாக க்ராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளதன் மூலமாக ஸ்பெயினின் ரபேல் நடால், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஆகியோரின் சாதனைகளை சமன் செய்துள்ளார். இதன் மூலம் 3 வீரர்களும் முதல் இடத்தில் உள்ளனர்.

Novak Djokovic wins 20th Grand Slam titles. Roger Federer joins Rafael Nadal.நடால், பெடரர் ஆகிய இரு வீரர்களுக்கும் தனது வெற்றியின் மூலம் பெருமையை சமர்பிப்பதாகவும், தான் இந்த இடத்தில் இருப்பதற்கு இரண்டு மூத்த வீரர்களுமே காரணம் என்று ஜோகோவிச் கூறியுள்ளார். உடலளவில், மனதளவில், விளையாட்டு நுட்பத்தில் என அனைத்து விதத்திலும் தனக்கு இரு ஜாம்பவான்களும் உதவியதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ஜோகோவிச்.

தன்னுடைய பயணத்தில் கடந்த 10 ஆண்டுகள் நம்பமுடியாத அளவுக்கு இருந்த்தாகவும், அந்த பயணம் இத்தோடு முடியப்போவதில்லை என்றும் ஜோகோவிச் கூறியுள்ளார். தனது 34 வயதில் நான்கு முக்கிய போட்டிகளில் ஒரே ஆண்டில் வெற்றியை பதிவு செய்தது மட்டுமல்லாது, க்ராட்ண்ஸ்லாம் பட்டத்தையும் வென்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்.

நடப்பு ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் ஆகியவற்றை தொடர்ந்து விம்பிள்டன் போட்டியிலும் ஜோகோவிச் வாகை சூடியுள்ளார்.

Link Source: https://ab.co/3hD9lge