Breaking News

நோவாக் ஜோக்கோவிச் விவகாரம்_ ஆஸ்திரேலியா பிரதமருடன் போனி பேசிய செர்பிய பிரதமர்

Novak Djokovic affair. Serbian PM speaks to Australian PM

ஆஸ்திரேலியாவில் இருந்து வீரர் நோவக் ஜோகோவிச்சை நாடு கடத்த முடியுமா என்பதை உறுதியாக சொல்ல முடியாத நிலை நீடித்து வரும் நிலையில், பிரதமர் ஸ்காட் மோரிசன் செர்பிய பிரதமர் அனா ப்ரனாபிக் உடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Novak Djokovic affair. Serbian PM speaks to Australian PM.ஆஸ்திரேலியா ஓபனில் விளையாடுவதற்காக மெல்பெர்ன் வந்த உலகின் நம்பர் ஒன் வீரர் நோவோக் ஜோக்கோவிச், இன்னும் கொரோனா தடுப்பூசி போடவில்லை. அதனால் அவரை ஆஸ்திரேலியா ஓபனில் விளையாட அனுமதிக்க முடியாது என்று கூறி, ஆஸ்திரேலியா நாட்டு அரசு நோவோக் ஜோக்கோவிச்சை மெல்போர்னில் தடுப்பு காவலில் வைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெல்போர்னில் உள்ள பெடரல் கோர்ட்டில் நோவாக் ஜோக்கோவிச் வழக்கு தொடர்ந்தார். இருதரப்புக்குமான விசாரணை முடிந்துவிட்ட நிலையில், ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசின் முடிவு செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் நோவாக் ஜோக்கோவிச்சை விளையாட அனுமதிக்கக் கூடாது என்பதில் ஆஸ்திரேலியா அரசு உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது. இதற்கிடையில் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரீசனை போனில் தொடர்பு கொண்ட செர்பிய பிரதமர் அனா ப்ரனாபிக், வீரர் ஜோகோவிச்சை ஆஸ்திரேலிய அதிகாரிகள் நியாயமாக நடத்த வேண்டும் மற்றும் அவரது உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Link Source: https://bit.ly/3fh6DuY