Breaking News

குயின்ஸ்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை : அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு பதவி விலகும் தலைமை சுகாதார அதிகாரி Jeannette Young அறிவுறுத்தல்

No virus has been reported in Queensland in the last 24 hours. Outgoing Chief Health Officer Jeannette Young instructs everyone to be vaccinated

குயின்ஸ்லாந்தில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாகவே புதிய பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை. சுகாதாரத் துறையின் அறிவிப்பின்படி கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருப்பதாகவும் யாருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் புதிய தலைமை சுகாதார அதிகாரி தேடப்பட்டு வரும் நிலையில் தற்போதைய அதிகாரி டாக்டர் Jeannette Young பதவிக்காலம் நிறைவடைந்து பணியிலிருந்து விடை பெறுகிறார்.

No virus has been reported in Queensland in the last 24 hours. Outgoing Chief Health Officer Jeannette Young instructs everyone to be vaccinated..குயின்ஸ்லாந்தில் தற்போது மூன்றில் இரண்டு பங்கு நபர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாகவும், முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்ட பகுதிகளில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 75 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாகவும் டிசம்பர் 17ஆம் தேதி குயின்ஸ்லாந்து மாகாணத்தின் அனைத்து எல்லைகளும் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் ஊரகப் பகுதிகள் மற்றும் ரிமோட் பகுதிகளில் தடுப்பூசி செலுத்துவது தாமதம் ஏற்படுவதாகவும், இதனை தடுக்கும் வகையில் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் விடை பெறும் தலைமை சுகாதார அதிகாரி Jeannette Young கேட்டுக்கொண்டுள்ளார்.

No virus has been reported in Queensland in the last 24 hours. Outgoing Chief Health Officer Jeannette Young instructs everyone to be vaccinated.டாக்டர் Jeannette Young குயின்ஸ்லாந்து மாகாணத்தில் 16 ஆண்டுகாலம் தனது பணியை சிறப்புற செய்துள்ளார். தலைமை சுகாதார அதிகாரியாக பணியாற்றியவர் லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு தனது சேவையை வழங்கியுள்ளார். மாகாணத்தின் சுகாதாரம் மற்றும் நலனை பாதுகாப்பதில் பெரும்பங்கு வகித்தவராக டாக்டர் Jeannette Young அறியப்படுகிறார். தலைமை சுகாதார ஆதியாக அதிகாரியாக தனது பணியை சேவையாக செய்து ஓய்வு பெறும் டாக்டருக்கு குயின்ஸ்லாந்து மாகாண ப்ரீமியர் Annastacia Palaszczuk தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் மேலும் அவரின் கடைசி செய்தியை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

தலைமை சுகாதார அதிகாரி கேட்டுக் கொண்டதன் படி அனைவரும் விரைவாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ளும் பட்சத்தில் இனி வரும் நாட்களை நாம் கொண்டாட்டமாக மாற்ற முடியும் என்றும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மாகாண எல்லைகள் திறக்கப்பட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கு செல்ல முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: shorturl.at/msyMS