Breaking News

குயின்ஸ்லாந்தில் சமூக பரவல் மூலமாக புதிய வைரஸ் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை : புதிய தலைமை சுகாதார அதிகாரியை தேடுகிறது குயின்ஸ்லாந்து

குயின்ஸ்லாந்து மாகாணத்தில் சமூகப் பரவல் மூலமாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக வைரஸ் தொற்று எதுவும் பதிவாகவில்லை என்றும், அதே நேரத்தில் தற்போதைய தலைமை சுகாதார அதிகாரியை மாறுதல் செய்து புதிய அதிகாரியை நியமிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாக குயின்ஸ்லாந்து துணை பிரீமியர் Steven Miles தெரிவித்துள்ளார்.

No new virus outbreak reported in Queensland Queensland seeks new chief health officerகடந்த அக்டோபர் மாதம் தலைமை சுகாதார அதிகாரியாக பொறுப்பேற்ற Jeannette Young கவர்னராக பதவி உயர்வு பெற உள்ள நிலையில் தற்போது அவர் திங்கட்கிழமையில் இருந்து தனது பணிகளைத் தொடர மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய தலைமை சுகாதார அதிகாரிக்கான பரிந்துரையில் தற்போதுள்ள துணை சுகாதார அதிகாரிகள் மூன்று பேரின் பெயர்களும் உள்ளன. அவர்களில் Peter Aitken புதிய அதிகாரி நியமிக்கப்படும் வரை தற்காலிகமாக பொறுப்பு வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

Jeannette Young தலைமை சுகாதார அதிகாரியாக தனது பணியை முழுமையாக செய்து வந்ததாகவும், அவர் தற்போது கவர்னராக பொறுப்பேற்பதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும் ராணியின் உத்தரவுக்காக அவர் காத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

No new virus outbreak reported in Queensland, Queensland seeks new chief health officerDr Hajkowicz தனிப்பட்ட காரணங்களுக்காக தலைமை சுகாதார அதிகாரி பொறுப்பை ஏற்க மறுத்துவிட்ட நிலையில் தற்போது, அவர் தொடர்ந்து சுகாதாரத்துறையில் மருத்துவராகப் பணியாற்றுவதற்கான அனுமதி வழங்கப்படுவதாகவும் சிறந்த மருத்துவரை இழக்க விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Hajkowicz தலைமை சுகாதார அதிகாரி பொறுப்பை ஏற்காதது மிகவும் ஆச்சரியமாக இருப்பதாகவும் தாங்கள் மிகவும் எதிர்பார்த்த நபர் அவர் என்றும் துணை சுகாதார அதிகாரி Lynne McKinley கூறியுள்ளார்.

தலைமை சுகாதார அதிகாரியை தேர்ந்தெடுப்பதற்கான குழுவில் தற்போது துறையின் இயக்குனர் உள்ளிட்ட நிபுணர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், சரியான நபரை விரைவில் தேர்வு செய்வார்கள் என்றும் துணை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே குயின்ஸ்லாந்தில் 90% பேர் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட பின்னர் தற்போதுள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்படும் என்றும் எல்லைகள் முழுமையாக திறக்கப்படும் என்றும் துணை சுகாதார அதிகாரி Lynne McKinley தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3Cu5dqN