Breaking News

மேற்கு ஆஸ்திரேலியாவில் எந்த ஒரு புது கொரோனா தொற்றும் ஏற்படவில்லை !

Premier Mark McGowan

மேற்கு ஆஸ்திரேலியாவில் பெர்த் ஹோட்டல் தனிமைப்படுத்தப்பட்டதில் எந்த ஒரு புது Covid – 19 தொற்றும் ஏற்படவில்லை. Premier Mark McGowan கூறுகையில், 3171 மக்களுக்கு சோதனை மேற்கொண்டதில், 13 பேருக்கு negative வந்தது. இது நம்பிக்கையான தொடக்கம். மேலும் இரவு 10 மணி வரை public metropolitan clinics திறந்திருக்கும் என்றார். மக்கள் தானாக முன்வந்து தொடர்ந்து சோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

Perth’s CBDயில் Sheraton Four Points ஹோட்டலின் காவலருக்கு இங்கிலாந்தின் மாறுபடும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது. மேலும் அவர் பல நாட்கள் பல இடங்களில் கலந்து கொண்டுள்ளார். மரபணு சோதனை செய்ததில் அவருக்கு UK தொடர்புடைய தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்டும் இவ்வாறு எப்படி நடந்தது என்று WA Police விசாரணை நடத்தும் என்று மாநில முதல்வர் கூறினார்.

முன்னாள் WA chief health officer Tarun Weeramanthri , இது எவ்வாறு நடந்தது என்று ஆய்வு செய்வார். இது எவ்வாறு நடந்தது, இது மீண்டும் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை கண்டுபிடிப்போம் என்று Mr McGowan கூறினார்.

Metropolitan Perth, the Peel region and South West ஐந்து நாள் ஊரடங்கில் ஒரு நாள் முடிவடைந்துள்ளது. இது வெள்ளிக்கிழமை 6 மணி வரை தொடர்ந்து இருக்கும். அனைவரும் தங்கள் வீட்டிலேயே இருக்குமாறு வலியுறுத்தப்பட்டனர். மிகவும் தேவையானவற்றிற்கு மட்டுமே வெளியே செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். பள்ளிகள் திங்கட்கிழமை திறக்கப்படாது. இன்னும் ஒரு வாரம் மூடப்படும்.

Dr Miller, WA வுக்கு அழைப்பு விடுத்து . அதில் தனிமைப்படுத்தப்பட்ட தேவையான வசதிகளை சரியான காற்றோட்டமான பாதுகாப்பான N95முகக்கவசங்களை அதிகாரிகளுக்கு வழங்க முதலீடு செய்ய கூறினார். மேலும் காவலர்களுக்கு சிறந்த ஊதியம் வழங்கப்பட வேண்டும். . மேற்கு ஆஸ்திரேலியா மருந்து கடை, வணிக வளாகங்களுக்கு மக்கள் செல்ல பயப்பட வேண்டாம். மக்கள் வீட்டைவிட்டு வெளியே சென்றால் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

WA Health நோய் தொற்றுக்கு காரணமான 16 இடங்களுக்கு சென்றவர்களுக்கு கட்டாயமாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டனர். மேலும் ஒரு புதிய இடமான Grab N Go convenience கடையில் வேலை செய்தவருக்கு ஜனவரி 27ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது. WA Health கூறுகையில், இது ஒரு புதிய தொற்றாக இருக்கிறது என்று கூறியுள்ளது.