Breaking News

ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகள் : மாலியன் பெண்ணுக்கு மொராக்கோ மருத்துவமனையில் நிகழ்ந்த அதிசயம்

Nine children in a single delivery, Miracle at a Moroccan hospital for a Malian women

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியை சேர்ந்த 25 வயது பெண் Halima Cisse-க்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறக்கும் என்று பரிசோதனை மூலம் தெரியவந்தது. அதனை அடுத்து அவர் மொராக்கோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் பிரசவ நேரத்தில் ஏழு குழந்தைகள் பிறக்கும் என்று எதிர்பார்த்த மருத்தவர்களுக்கு ஆச்சர்யமாக 9 குழந்தைகள் பிறந்தன. அதில் 5 பெண் குழந்தைகளும், 4 ஆண் குழந்தைகளும் அறுவை சிகிச்சை முறையில் பிறந்தன. 9 குழந்தைகளும், தாயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் தனியார் மருத்துவமனைகளில் உள்ள இன்குபேட்டர் படுக்கைகளிலும் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டில் கூடுதல் கவனத்துடன் பராமரிக்கப்பட்டு வருவதாக மாலி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாலியில் ஒரே பிரசவத்தில் பல குழந்தைகள் பிறக்கும் மருத்துவ சேவைகளை செய்ய முடியாத அளவுக்கு மருத்துவ துறை மட்டுமல்லாது பல்வேறு துறைகளில் பினதங்கிய நாடாக மாலி இருக்கும் நிலையில், பிரசவதரதுக்காக Halima Cisse மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மொராக்கோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Nine children in a single delivery. Miracle at a Moroccan hospital for a Malian womenமுந்தைய மருத்துவ பரிசோதனைகளில் 7 குழந்தைகள் மட்டும் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான உரிய மருத்துவ சிகிச்சைகள் அளித்து அவர் கண்காணிக்கப்பட்டு வந்த்தாகவும், ஆனால் 30 வாரங்களில் அவர் பிரசவித்து 9 குழந்தைகளை ஈன்றெடுத்து இருப்பது ஆச்சர்யமாக இருப்பதாகவும் மருத்துவமனை இயக்குநர் Youssef Alaoui தெரிவித்துள்ளார்.

கின்னஸ் புத்தகத்தில் இதுவரை 8 குழந்தைகள் ஆரோக்கியமாக ஈன்றெடுக்கப்பட்டதே கடைசி சாதனையாக உள்ளதாகவும், 8 குழந்தைகளின் தாயான அமெரிக்க பெண்மணிக்கு பிறகு அந்த சாதனையை மாலி பெண் 9 குழந்தைகளுடன் முறியடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

Halima Cisse எந்தவிதமான குழந்தையின்மை சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை என்றும், அவரது முந்தைய மருத்துவ அறிக்கைகளை கூட மாலி சுகாதாரத்துறை வழங்கவில்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதே நேரம், பல குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுக்கும் போது கருப்பை நீக்கும் நிலையோ அல்லது உயிருக்கு ஆபத்தோ ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குழந்தைகளுக்கும் மருத்துவ ரீதியான சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

Link Source: https://ab.co/3h9YVVx