Breaking News

ஆக்கஸ் அமைப்பில் மேலும் சில நாடுகள் இணையலாம் : சீனாவுக்கு எதிரான மூன்று நாடுகளின் முயற்சி பிரத்யேகமான திட்டம் இல்லை எனவும் பிரிட்டன் ராணுவ தளபதி Nicholas Carter பேச்சு

Nicholas Carter, Britain's Commander-in-Chief, has said that the three - state effort against China is not a special plan

பிரிட்டன் பாதுகாப்பு படையின் தலைமை ஜெனரல் சர். Nicholas Carter தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து விடை பெறுகிறார். இதனையடுத்து பாதுகாப்பு படையின் மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர் பல்வேறு தகவல்களை அடங்கிய உரையை நிகழ்த்தி உள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளை உள்ளடக்கிய ஆக்கஸ் அமைப்பில் மேலும் சில நாடுகள் இணையலாம் என்றும் அது ஜப்பானாக இருக்கலாம் என்றும் Nicholas குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆக்கஸ் திட்டம் ஒரு போதும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் மூன்று நாடுகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் குறித்து இதுவரை தெளிவான புரிதல் எதுவும் இல்லை என்றும் , இதில் இருக்கும் சிக்கல்களை களைவது கேள்விக்குறியாகவே உள்ளது என்றும் Nicholas Carter தெரிவித்துள்ளார்.

Nicholas Carter, Britain's Commander-in-Chief, has said that the three - state effort against China is not a special plan.திறந்த மனதுடன் மூன்று நாடுகளும் தகவல்களை பறிமாறிக் கொள்வதே பிரச்சினைகளை கையாள்வதற்கு சிறந்த வழியாக இருக்கும் என்றும், ஆக்கஸ் அமைப்பில் ஜப்பான் இணைய உள்ளதாகவும் மேலும் நியூசிலாந்து, கனடா ஆகிய நாடுகள் இணைய வேண்டும் என்றும் Nicholas Carter கூறியுள்ளார். ஒருமித்த கருத்துடைய நாடுகள் ஒருங்கிணைந்து பணியாற்றுவதே வளர்ச்சிக்கான சிறந்த வழி என்றும், அதற்கான வாய்ப்புளும் இணைந்து பயணிப்பதற்கான வழிகளும் இருப்பதாக Nicholas தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசுத் தரப்பினர் ஆக்கஸ் அமைப்பில் வேறு எந்த நாடுகளையும் இணைக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

Nicholas Carter ஓய்வு பெறும் நிலையில் நவம்பர் மாதம் Naval தலைமை அதிகாரியான சர்.Antony Radakin பாதுகாப்புத்துறை தளபதியாக பொறுப்பேற்க உள்ளார். இவர் முன்னதாக ஆக்கஸ் அமைப்பின் பல்வேறு கட்ட விவாதங்களில் பங்கெடுத்தவர் ஆவார்.

Link Source: https://ab.co/2Z7oL6c