Breaking News

ஆஸ்திரேலியாவில் அடுத்தகட்ட கோவிட் தடுப்பூசிகள் : 25 மில்லியன் மாடெர்னா தடுப்பூசிக்கான ஓப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது

ஆஸ்திரேலியாவில் டெல்டா வகை வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் மூன்றாவது கட்டமாக ஒரு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாடர்னா தடுப்பூசிகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் உள்ளதாக Therapeutic Goods Administration தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களில் அனுமதி கிடைத்த பின்னர் 25 மில்லியன் மாடெர்னா தடுப்பூசி வாங்குவதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் Greg Hunt தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகள் கிடைத்த பின்னர் செப்டம்பர் மாத மத்தியில் மாடெர்னா முதல் டோஸ் போடுவதற்கான பணிகள் விரைந்து செயல்படுத்தப்படும் என்றும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

Next covid vaccines in Australia. 25 million Moderna vaccine contract to be signed soon.பைசர் தடுப்பூசியை ஒற்றியே மாடர்னா தடுப்பூசியும் இருக்கும் என்றும், அதன் பயன்பாடு, எந்தெந்த வயதினருக்கு எடுத்துக்கொள்ளலாம் என்பது தொடர்பாக ஏற்கனவே சுகாதாரத்துறை அரசுடன் கலந்தாலோசித்து முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டிய மாடனை தடுப்பூசி நான்கு வார இடைவெளியில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அஸ்ட்ராசெனகா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகள் எடுத்துக் கொண்டவர்கள் கூடுதலாக பூஸ்டர் பயன்பாட்டிற்காக மாடெர்னா தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் இருப்பதாக தெரியவந்துள்ளது. 15 மில்லியன் தடுப்பூசி களுக்கும் மேலாக பூஸ்டர் பயன்பாட்டிற்காக இந்த ஆண்டு இறுதிக்குள் செலுத்தப்பட விருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 12 வயது அதற்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்துவதற்கான ஒப்புதலுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவிலிருந்து தயாராகிவரும் மாடர்னா தடுப்பூசி கொரோனா வைரசுக்கு எதிராக சிறந்த எதிர் வினையாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 140 மில்லியன் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next covid vaccines in Australia. 25 million Moderna vaccine contract to be signed soon,.அதேநேரம் பைசர் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு அமெரிக்காவில் மிகச் சிலருக்கு மட்டுமே சாதாரண பின்விளைவுகள் இருப்பதாகவும், உடல் வலி அசதி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது. டிஜிஏ மற்றும் அமெரிக்கா ஒப்புதல் வழங்கியதுடன் உடனடியாக மாடர்னா தடுப்பூசிகளை வாங்குவதற்கான பணிகள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதாரத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து நேரடியாக தேவைப்படும் குறிப்பிட்ட வயதினர் பூஸ்டர் பயன்பாட்டிற்காக மாடெர்னா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3izhPFP