Breaking News

ஆஸ்திரேலியாவுக்கான பயண போக்குவரத்தை குறைந்தது இரண்டு மாதங்கள் நிறுத்தி வைக்க திட்டம் : நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவிப்பு

டெல்டா வகை வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதன் காரணமாக தெற்கு ஆஸ்திரேலியா விக்டோரியா நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில வாரங்களாக முடக்க நிலை அமலில் உள்ளது.

நாளுக்கு நாள் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஆஸ்திரேலியாவுடனான பயண போக்குவரத்தை குறைந்தது இரண்டு மாத காலங்களுக்கு நிறுத்தி வைப்பதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் நாடு திரும்புவதற்கு ஒரே ஒரு விமானம் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும், அதன் மூலமாக அவர்கள் நாடு திரும்பியதும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு பின்னரே வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

New Zealand Prime Minister Jacinda Ardern has announced plans to suspend travel to Australia for at least two monthsமேலும் தாங்கள் அங்கு தங்கி இருப்பது ஆபத்தானது என்றும் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்றும், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த மக்களுக்கு பிரதமர் கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். 14 மில்லியன் மக்கள் ஆஸ்திரேலியாவில் முழுக்க நிலையால் அவதிப்பட்டு வரும் நிலையில் அங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் சிக்கி தவிப்பதாகவும் ,அதே நேரத்தில் பயண கட்டுப்பாடுகளை மீதி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேவையின்றி சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மூலமாக தொற்று பரவும் அபாயம் அதிகமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

நியூசிலாந்து மக்களை தொடர் பாதிப்பிலிருந்து காப்பதற்கு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்றும் பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Link Source: https://bit.ly/3kQHDia