Breaking News

ஆக்லாந்தில் பல்பொருள் அங்காடியில் 9 பேரை கத்தியால் குத்திய இலங்கையை சேர்ந்தவரை நாடு கடத்தும் பணியை நியூசிலாந்து தொடங்கியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர் 2011ஆம் ஆண்டு மாணவர் விசாவில் நியூசிலாந்து வந்துள்ளார் .பிறகு விசா காலம் முடிவடைந்ததும் அவர் இலங்கைக்கு திரும்பாமல் நியூசிலாந்திலேயே அகதியாக தங்குவதற்கு அனுமதி கோரியுள்ளார்.

New Zealand has begun the deportation of a Sri Lankan man who stabbed nine people at a supermarket in Auckland..முதலில் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் மேல்முறையீட்டின் போது அவருடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அகதியாக தங்குவதற்கு 2013 ல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2016 இல் அஹமத் அதில் மொஹமத் சம்சுதீனின் சமூக வலைத்தள பக்கங்களில் ஆய்வு செய்தபோது தீவிரவாதத்திற்கு ஆதரவான சில கருத்துக்களை பகிர்ந்து அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் தொடர் விசாரணை மேற்கொண்ட அரசு அவரை தொடர்ச்சியாக கண்காணித்து வந்தது .

இந்தநிலையில் அண்மையில் நடைபெற்ற பல்பொருள் அங்காடி தாக்குதலில் இவர் ஒன்பது பேரை கத்தியால் குத்தியதும் தெரியவந்துள்ளது .

அதேநேரம் இவரை நாடு கடத்துவதற்கு தேவையான சட்ட பூர்வ ஒப்புதல் என்பது நீதிமன்றத்தின் மூலமாக கிடைக்காததால் அவரை மீண்டும் இலங்கை அனுப்புவது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

New Zealand has begun the deportation of a Sri Lankan man who stabbed nine people at a supermarket in Auckland...இவரால் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த கூடிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தவறான முறையில் உரிமை கேட்டு விண்ணப்பித்த இவ்வாறு நாட்டுக்குள் தங்கி இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அவரை நாடு கடத்துவதற்கு தேவையான அனைத்து சட்ட பூர்வ நடவடிக்கைகளை இதனுடைய அரசுகளை இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Link Source: https://bit.ly/3yM7M4X