Breaking News

மனித செல்களில் கொரோனா வைரசின் உருமாற்றத் தன்மையை கட்டுப்படுத்த புதிய உத்தி : ஆஸ்திரேலிய புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பில் வெளியான தகவல்கள்

புதிய வகை டெல்டா வைரஸ் பரவி வரும் நிலையில் தடுப்பூசி ஒன்றே தற்போது இதற்கான தீர்வு என்றும் பெருந்தொற்று காலத்தில் வைரசுக்கு எதிரான போரில் நாம் தொடர்ந்து தடுப்பூசி போன்ற ஆயுதங்களை நம்பி வருகிறோம்.

ஆனால் மேலும் ஆறுதல் அளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்களின் முடிவுகள் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. மனித உடலில் செல்களில் இருந்து புதிய வகையாக உருவெடுக்கும் கொரோனா வைரஸின் அடிப்படைகளை ஆராய்ச்சியின் மூலம் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.

Peter MacCallum கேன்சர் மையம் Molecular scissors -ஐ பயன்படுத்தி சார்ஸ் Covid 2 வைரஸை மனித உடலில் உருமாற்றம் செய்வதை முற்றிலும் தடுக்க முடியும் என்பதை உறுதி செய்துள்ளது.

வைரஸ் பாதிப்பிற்கு உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகள் என்பது இன்னும் சில ஆண்டு காலத்திற்கான தேவை என்ற நிலையில் தற்போது உருமாற்றம் அடையும் வைரஸ்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

New strategy to control coronavirus mutations in human cells, Australian cancer research' findings,McCullum கேன்சர் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவர் Mohamed Fareh இந்த தொழில்நுட்பம் முன்னதாக கேன்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் இருந்து பெறப்பட்டது என்றும் இது கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மிக முக்கிய பங்காற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். Deakin University தொற்று நோயியல் துறை மருத்துவர் Catherine Bennett சம்பந்தப்பட்ட ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருப்பதாகவும் இந்த மருந்துகள் ஏற்படுத்தும் முடிவுகள் மிகவும் வியப்பை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

வெகு சிலருக்கு தடுப்பூசிகள் தோல்வியடையும் பட்சத்தில் இது போன்ற சிகிச்சை முறைகளை மேற்கொண்டு உயிர்காக்கும் நடவடிக்கைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் மேற்கொள்ள முடியும் என்று Catherine Bennett நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3ib6Alj