Breaking News

நியூ சவுத் வேல்ஸ் : ஓட்டல் ஒன்றில் நெறிமுறைகளை பின்பற்றாத வாடிக்கையாளர் – உரிமையாளரை கண்மூடித்தனமாக தாக்கிய அதிர்ச்சி சம்பவம்

New South Wales, Unscrupulous customer in a hotel blindly assaults owner

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மத்திய மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள Forster உணவகத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஹோட்டலில் தங்குவதற்காக வந்த தம்பதியிடம் சில வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு கூறப்பட்டது. ஆனால் அவற்றை புறக்கணித்த அவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விசாரிக்கச் சென்ற ஹோட்டல் உரிமையாளர் Mostafa Jamalifard- யை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் அவர் முகங்கத்தில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.

New South Wales, Unscrupulous customer in a hotel blindly assaults owner,.கியூ ஆர் கோட் ஸ்கேனிங், முக கவசம் அணிவது உள்ளிட்ட சில நடவடிக்கைகளை செய்ய மறுத்த அந்த நபர், தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக தங்க வந்த நான் இது போன்ற செயல்களை செய்ய மாட்டேன் என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 34 வயதான ஆண் மற்றும் 27 வயதான பெண் ஆகிய இருவருமே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள Forster ஓட்டல் உரிமையாளர் Mostafa Jamalifard, சம்பந்தப்பட்ட தம்பதியினரிடம் என்ன பிரச்சனை தான் உங்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்று கேட்கச் சென்றதாகவும் ஆனால் அவர்கள் கண்மூடித்தனமாக தன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதில் தன்னுடைய முகத்தில் காயங்கள் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

New South Wales, Unscrupulous customer in a hotel blindly assaults owner.அங்கிருந்து தப்பித்து மற்றொரு உணவகத்திற்கு சென்று இருவரையும் காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் நிபந்தனை ஜாமீன் மூலமாக இருவரும் வெளியே வந்துள்ளனர். மேலும் இருவருக்கும் தலா ஆயிரம் டாலர் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரொனா கால வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூ சவுத் வேல்ஸ் துணை காவல் ஆணையர் Gary Worboys, மிகவும் எதிர்பாராத வகையில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் இது போன்ற செயலில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3AkrTcG