Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் சமூகப்பரவல் காரணமாக ஒரே நாளில் 100 பேருக்கு மேலாக தொற்று அதிகரிக்கும் : நியூ சவுத் வேல்ஸ் ப்ரீமியர் Gladys Berejiklian தகவல்

New South Wales Premier Gladys Berejiklian reports that more than 100 people will be infected in a single day due to social unrest in the state of New South Wales

கடந்த 24 மணி நேரத்தில் 77 பேருக்கு சமூகப்பரவல் மூலமாக தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், 42 பேருக்கு பரவல் வேகம் என்பது மிக அதிகமாக இருப்பதால் ஜூலை 16ஆம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ் ப்ரீமியர் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் சமூகப்பரவல் காரணமாக ஒரே நாளில் 100 பேருக்கு மேலாக தொற்று அதிகரிக்கும் : நியூ சவுத் வேல்ஸ் ப்ரீமியர் Gladys Berejiklian கூறியுள்ளார்.

வரும் நாட்களில் தொற்று பாதிப்பு மிக வேகமாக அதிகரிக்கும் என்றும் ஒருநாள் பாதிப்பு 100 என்ற உச்சத்தை தொடும் என்றும் பிரிமியர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது மிகவும் அச்சமூட்டும் பாதிப்பு என்றும் வரும் நாட்களில் இது அதிகரிக்கும் என்ற தகவல் கவலை அளிப்பதாக தலைமை மருத்துவ அதிகாரி Paul Kelly கூறியுள்ளார்.

New South Wales Premier Gladys Berejiklian reports that more than 100 people will be infected in a single day due to social unrest in the state of New South Wales,சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் இது மிகவும் சவாலான ஒன்று என்றும், இது வரும் நாட்களில் வெகுவாகக் குறையும் என்று நம்புவதாகவும் தலைமை சுகாதார அதிகாரி Paul Kelly தெரிவித்துள்ளார். முந்தைய நாளின் 77 பாதிப்புகளில் 50 பேர் நெருங்கிய வட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், லிவர்பூல் மருத்துவமனையில் 90 வயது மூதாட்டி உயிரிழந்த விவகாரம் மாகாணத்திற்கு
எச்சரிக்கை மணி என்றும் Paul Kelly கூறியுள்ளார்.

சவுத் வெஸ்ட் சிட்னியில் தொற்று பாதித்தவரின் நெருங்கிய தொடர்பில் இருந்த பெண் ஒருவர் பாசிடிவ் என முடிவு வந்த நிலையில் உயிரிழந்தார். அவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்று நியூ சவுத் வேல்ஸ் சுகாதார துறை உறுதிப்படுத்தியுள்ளது.

New South Wales Premier Gladys Berejiklian reports that more than 100 people will be infected in a single day due to social unrest in the state of New South Wales.தங்களைப் பற்றி கவலைப்படாதவர்கள் பற்றி அரசுக்கு கவலை இல்லை என்றும் அதே நேரத்தில் இது அனைத்து தரப்பு வயதினரையும் பாதிப்பதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நியூ சவுத் வேல்ஸ் ப்ரீமியர் கூறியுள்ளார். டிசம்பரில் தொற்று பாதித்து முதல் உயிரிழப்பு ஏற்பட்டதிலிருந்து சவுத் வெஸ்ட் சிட்னியில் கூடுதல் கண்காணிப்போடு செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பகுதி கூடுதல் பாதிப்போடு மிக அதிக அளவிலான சமூக பரவலை ஏற்படுத்தும் இடமாக இருப்பதாகவும் ஒவ்வொரு வீடுகளில் இருந்து இன்னொரு வீட்டிலிருக்கும் உறுப்பினர்களுக்கு எளிதில் தொற்று பரவல் நடைபெறுவதாகவும் தலைமை சுகாதார அதிகாரி Kerry Chant கூறியுள்ளார்.

ஊரடங்கு நடவடிக்கையை கருத்தில் கொண்டு அனைவரும் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும், தொற்று பரவல் முற்றிலுமாக கட்டுக்குள் வரும் வரை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் ப்ரீமியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களின் பட்டியலில் வெவ்வேறு இடங்களுக்கு சென்று வந்தவர்கள் உடனடியாக தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களோடு தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்களும் அதனைச் செய்ய வேண்டும் என்றும் ப்ரீமியர் கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3xCrhgJ