Breaking News

கடந்தாண்டு பொது இடத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் குறித்த பின்னணி விபரங்களை நியூ சவுத் வேல்ஸ் மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.

New South Wales Police have released background information on who was involved in a public shooting last year.

கடந்தாண்டு நவம்பர் மாதம் விங்டங் சாலையில் இரண்டு பேரிடம் பேசிக் கொண்டிருந்த நபர் திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். அவரை உடனடியாக கைது செய்த காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தியது.

New South Wales Police have released background information on who was involved in a public shooting last year..இதன்மூலம் அவருடைய பெயர் சைமன் ஃபிளமிங் என்று தெரியவந்தது. அதை தொடர்ந்து இதுதொடர்பான விசாரணை நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் கூட்டு பயங்கரவாத எதிர்ப்புக் குழுவுக்கு மாற்றப்பட்டது. இந்த விவகார்ம தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு, நேற்று வாலாங்கோங் பகுதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. சைமன் ஃபிளமிங் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு ஆயுட்காலம் முழுவதும் சிறைதண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதுதொடர்பாக வழக்கை விசாரித்து வரும் காவலர்கள் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது அவர், கைது செய்யப்பட்ட சைமன் இனவெறி எண்ணம் கொண்டவராக இருந்துள்ளார். இதை அவருடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சமூகவலைதள கணக்குகள் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது என்று தெரிவித்துள்ளனர்.

Link Source: https://ab.co/36BxyAB