Breaking News

நியூ சவுத் வேல்ஸ் – கொரோனா தொற்றின் புதிய உச்சம் : முந்தைய நாளின் பாதிப்பை விட அதிகரித்த தொற்று பாதிப்பு

New South Wales - New peak of corona infection. Increased risk of infection than previous day

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஒரு நாளின் உச்ச பட்ச பதிவான 112 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதே மட்டுமே தவறான சமிக்ஞையாக இருக்க முடியாது என்றும் நியூ சவுத் வேல்ஸ் தலைமை சுகாதார அதிகாரி Kerry Chant கூறியுள்ளார்.

முதன்முறையாக தொற்று பாதிப்பு ஒரே நாளில் 100-ஐ தாண்டியுள்ள நிலையில் இது தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டிய தேவை உள்ளதாகவும், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்துதல், தொற்று தொடர்பில் இருந்தவர்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தலைமை சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிட்னியின் கிழக்கு ஊரக பகுதிகளில் அதிக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வரும் நிலையில், கடந்த சில மாதங்களை காட்டிலும் ஒரே நாளில் உச்சபட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி உள்ளது. இது 2020ம் ஆண்டு தொடக்கத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் ஒரு நாள் பாதிப்பை விட இரண்டு மடங்காகும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய வகை டெல்டா வைரஸ் சமூகப் பரவல்மூலமாக மிக வேகமாக பரவி வரும் நிலையில் தலைமை சுகாதார அதிகாரி இரு வேறு கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது என்றும், அதே நேரத்தில் இந்த எண்ணிக்கையும் கண்டு நாம் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

New South Wales - New peak of corona infection. Increased risk of infection than previous day.Fairfield பகுதியில் வீடுகளில் இருப்போருக்கு தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது என்றும், ஒரே வீட்டில் ஐந்து பேர் இருக்கும் நிலையில் அவர்களுக்கு மிக வேகமாக வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் படுவதாகவும் Kerry Chant கூறியுள்ளார். ஒருவருக்கு டெல்டா வகை தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படும் நிலையில் மற்ற அனைவருமே பாதிப்புக்கு ஆளாகும் நபர்களாக அறியப்படுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் தொற்று பாதித்தவர்களுக்கு தொடர்பில் இருந்தவர்கள் மிக வேகமாக வைரஸ் பாதிப்பிற்கு ஆளாவதாகவும், அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் Kerry Chant தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டரை மாதத்தில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வரும் என்றும் எண்ணிக்கை அதிகரிப்பதை கண்டு அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே 16ஆம் தேதி வரை கூட அங்கு கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும் அதன் பின்னர் தளர்வுகள் ஏற்படுத்தப்படும் என்றும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் நியூ தமில் ப்ரீமியர் Gladys Berejiklian கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/2U7mTYj