Breaking News

கட்டாய கொரோனா பரிசோதனை கட்டுப்பாடு, சுகாதார பணியாளர்களுக்கு கடும் பணிச்சுமை ஏற்படுவதாக நியூ சவுத் வேல்ஸ் மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,062 நபர்களுக்கும், விக்டோரியாவில் 2738 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இரு மாகாணத்திலும் சேர்த்து நேற்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் புத்தாண்டு விடுமுறைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் கொரோனா பரிசோதனை மையங்களில் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும், ஆயிரக்கணக்கானவர்களை பரிசோதனை செய்ய வேண்டியுள்ளதால் சுகாதார பணியாளர்கள் கடும் அழுத்தத்தை சந்திக்க நேரிடுவதாக நியூ சவுத் வேல்ஸ் மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் Brad Hazzard குற்றம்சாட்டியுள்ளார்.

New South Wales Health Minister has blamed compulsory corona testing restrictions on health workers..மேலும் குயின்ஸ்லாந்து மாகாணத்திற்குள் நுழைய கொரோனா பரிசோதனை அவசியம் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாகாண சுகாதாரத்துறை அமைச்சர், குயின்ல்ஸாந்து பிரிமீயர்Annastacia Palaszczuk யிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அனைவருக்கும் பரிசோதனை என்ற கட்டுப்பாடுகளால், கால தாமதம் ஏற்படுவது மட்டுமல்லாமல், அவசியமாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டியவர்களும் பல மணி நேரங்கள் காத்துக்கிடக்க வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது சுகாதாரத்துறை பணியாளர்கள் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்த குயின்ல்ஸாந்து பிரிமீயர், அமைச்சர் ஹசார்ட் கோரிக்கை விரைவில் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஜனவரி 1 ஆம் தேதி அது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பரிசோதனைக்கு ரேபிட் ஆண்டி ஜென் பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் குயின்ல்ஸாந்தில் இந்த பரிசோதனைக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

ஏராளமான கர்ப்பினி பெண்கள் கொரோனா பரிசோதனைக்காக காத்திருப்பது, அவர்களுக்கு தொற்று பரவல் அபாயத்தை அதிகரித்துள்ளது. இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

Link Source: https://bit.ly/3EDa5dE