Breaking News

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மீதான சவால்களை நியூ சவுத் வேல்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் முழுவதுமாக தள்ளுபடி செய்த விவகாரம் : பொதுத்தேர்தலுக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் அழைப்பு விடுவதற்கான ஏதுவான சூழல் உருவாகி இருப்பதாக தகவல்

எதிர்வரும் உள்ள தேர்தலுக்கான லிபரல் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் மீதான சவாலை நியூ சவுத் வேல்ஸ் அப்பீல் நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து பிரதமர் ஸ்காட் மோரிசன் சட்டபூர்வமான வெற்றியைப் பெற்றிருக்கிறார். இந்நிலையில் பிரதமர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.

லிபரல் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் இனப் பாகுபாடு சர்ச்சை தொடர்பாக அவர் மீது ஏராளமான புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

New South Wales Court of Appeals dismisses allegations against Australian Prime Minister Scott Morrison.தேர்தல் நேரத்தில் இது போன்ற விவகாரங்கள் கட்சியின் பிரச்சாரம் மற்றும் அது தொடர்பான செய்திகள் வெளிவருவதில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், பெண் வேட்பாளர்களை எதிர்த்து தான் பெண்களுக்காக ஆதரவாக இருப்பதாக பிரதமர் கூறிக் கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லிபரல் செனட்டர் Concetta Fierravanti-Wells, பிரதமர் மீது கூறிய புகார்களைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமீபத்திய மழை வெள்ள நிவாரண தொகை அளிக்கும் விவகாரத்தில் மிகுந்த பாகுபாடு காட்டியதாக பிரதமர் மீது குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்நிலையில் நியூ சவுத் வேல்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் பிரதமர் மீதான அனைத்து சவால்களையும் நிராகரித்துள்ள தன் மூலமாக பொதுத்தேர்தலுக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் சந்திப்பதற்கான ஏதுவான சூழல் உருவாகி இருப்பதாகவும், தனது சொந்த மாகாணமான நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தனது செல்வாக்கை முழுவதும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு ஸ்காட் மோரிசனுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

New South Wales Court of Appeals dismisses allegations against Australian Prime Minister Scott Morrison,அதே நேரத்தில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற முன் தேர்வுகள் அனைத்தும் செல்லும் என்று உத்தரவிடக் கோரி மீண்டும் நீதிமன்றத்தை முன்னாள் லிபரல் கட்சி தலைவர் Matthew Camenzuli அணுகியுள்ளார். கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் வகையிலும் இனப்பாகுபாடு ரீதியாகவும் நடைபெற்ற முன் தேர்வு நடைமுறைகளை செல்லும் என அறிவிக்கக் கோரி அவர் நீதிமன்றத்தை நாடி உள்ளார்.

பெண்களை தேர்வு செய்யும் வகையில் முனைப்பு காட்டிய பிரதமர் ஸ்காட் மோரிசன், முன் தேர்வில் இருந்த பெண் வேட்பாளர்களை நிராகரித்தது ஏன் என்று லிபரல் கட்சி பெண் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Link Source: https://ab.co/37yfffV