Breaking News

ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் இனப்பாகுபாடு சர்ச்சை : லிபரல் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் மீதான சவாலை நிராகரித்தது நியூ சவுத் வேல்ஸ் அப்பீல் நீதிமன்றம்

எதிர்வரும் உள்ள தேர்தலுக்கான லிபரல் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் மீதான சவாலை நியூ சவுத் வேல்ஸ் அப்பீல் நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து பிரதமர் ஸ்காட் மோரிசன் சட்டபூர்வமான வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் பிரதமர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. லிபரல் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் இனப் பாகுபாடு சர்ச்சை தொடர்பாக அவர் மீது ஏராளமான புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

New South Wales Court of Appeal rejects Liberal Party's list of candidates.தேர்தல் நேரத்தில் இது போன்ற விவகாரங்கள் கட்சியின் பிரச்சாரம் மற்றும் அது தொடர்பான செய்திகள் வெளிவருவதில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், பெண் வேட்பாளர்களை எதிர்த்து தான் பெண்களுக்காக ஆதரவாக இருப்பதாக பிரதமர் கூறிக் கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லிபரல் செனட்டர் Concetta Fierravanti-Wells, பிரதமர் மீது கூறிய புகார்களைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமீபத்திய மழை வெள்ள நிவாரண தொகை அளிக்கும் விவகாரத்தில் மிகுந்த பாகுபாடு காட்டியதாக பிரதமர் மீது குற்றம் சாட்டி உள்ளனர்.

அதேபோன்று நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திற்கான லிபரல் கட்சிக்கான நிதியை வழங்குவதிலும் பல்வேறு குளறுபடிகளை செய்ததாக Catherine Casa கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் பிரதமரின் ஸ்காட் மோரிசன் மறுத்துள்ளார்.

New South Wales Court of Appeal rejects Liberal Party's list of candidates,பிரதமர் தற்போது தான் செய்த தவறுகளை திருத்திக் கொண்டாலும் அவர் தனது சமூகத்திற்கு செய்த அநீதிகளை சரி செய்ய முடியாது என்றும், எதிர்வரும் தேர்தலில் தான் பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க போவதில்லை என்றும் Cathereine Casa திட்டவட்டமாக கூறியுள்ளார். தேர்தலுக்கு முன்னதாக லிபரல் கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பம் மற்றும் கருத்து மோதல் காரணமாக தேர்தல் பிரச்சாரம் மற்றும் செய்திகளில் இவர் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

லிபரல் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் மீது எழுந்துள்ள சர்ச்சை என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்றும், இனப்பாகுபாடு கொண்டவர் என்று பிரதமர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் கருவூலக் காப்பாளர் கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3Jf9XDm