Breaking News

மேற்கு ஆஸ்திரேலியாவில் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் : தனிமைப்படுத்துதல் மற்றும் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கி மாகாண அரசு உத்தரவு

New restrictions on those in contact with infected people in Western Australia. provincial government order granting isolation and relaxation of restrictions

மேற்கு ஆஸ்திரேலியாவில் மைக்ரான் தொற்று பாதிப்பு தொடர்ந்து இருந்து வரக்கூடிய நிலையில் சில தளர்வுகள் மற்றும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து மேற்கு ஆஸ்திரேலிய ப்ரீமியர் Mark McGowan உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து கோவிட் பரிசோதனை மேற்கொள்ளும் நபர் கண்டிப்பாக ஏழுநாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் 14 நாட்களாக இருந்த தனிமைப் படுத்துதல் 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஏழாவது நாள் முடிவில் அவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால் தொடர்ந்து தனிமைப்படுத்துதல் தொடர வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தொற்று பாதித்த ஒருவருடன் குடும்ப உறுப்பினராகவோ அல்லது சந்தித்த நபர்களாக இருந்தால் அவர்கள் நெருங்கிய தொடர்பாக எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.

New restrictions on those in contact with infected people in Western Australia. provincial government order granting isolation and relaxation of restrictions.மேலும் சந்திப்பின் போது 15 நிமிடங்கள் முகக் கவசம் அணியாமல் நேருக்குநேர் பேசி இருந்தால் அவர்களும் நெருங்கிய தொடர்பாக கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவார்கள் என்று ப்ரீமியர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் தேவையானவர்களுக்கு மட்டுமே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அனைவருக்கும் பரிசோதனை மேற் கொள்ளப்பட மாட்டாது என்றும் மேற்கு ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மற்ற மாகாணங்கள் மற்றும் சர்வதேச நாடுகளில் இருந்து மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு வருகை தரும் பயணிகள் 14 நாட்களுக்கு பதிலாக ஏழுநாட்கள் தனிமைப்படுத்துதல் போதுமானது என்றும் ப்ரீமியர் Mark McGowan கூறியுள்ளார்.

அதே நேரத்தில் பயணிகள் எங்கு சென்றாலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் உள்ளரங்கு மற்றும் வெளிப்புறங்களில் முகக்கவசம் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் அவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்த படுவார்கள் என்றும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

New restrictions on those in contact with infected people in Western Australia. provincial government order granting isolation and relaxation of restrictions,.தொற்று பாதிப்பு ஒரே இரவில் 26 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் பள்ளிகள் திறப்பு வழிவகுக்கும் என்றும் ப்ரீமியர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் மேற்கு ஆஸ்திரேலிய அரசு வகுத்துள்ளது மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் அதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் Mark McGowan கூறியுள்ளார்.

இது தொற்று பாதிப்பின் இறுதி காலம் என நாம் எடுத்துக் கொள்ள முடியாது என்றும் இந்த கடினமான சூழலை சில நடவடிக்கைகள் மூலமாகவே நாம் கடந்து செல்ல முடியும் என்றும் ப்ரீமியர் Mark McGowan தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3uz0mUq