Breaking News

மெல்போர்ன், விக்டோரியா மாகாணங்களில் புதிய கட்டுப்பாடுகள் : தொற்றுப் பரவல் குறையாத நிலையில் நீட்டிக்கப்படும் ஊரடங்கு

New restrictions in Melbourne and Victoria Curfew extended to reduce the spread of the disease

புதிதாக தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில் ஏற்கனவே போடப்பட்ட ஊரடங்கு வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு படுவதாகவும், அதே நேரத்தில் கூடுதலாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மெல்போர்ன், விக்டோரியாவில் பல்வேறு சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. அத்தியாவசிய பயணத்திற்கான கியூ ஆர் கோட் ஸ்கேன் செய்யப்பட்டு அதன் பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

மெல்போர்னை பொருத்த வரை 5 காரணங்களுக்காக மட்டுமே மக்கள் வீடு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. உணவுக்கான அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைக்கு செல்லுதல். அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் செல்லுதல். முதியோர் பராமரிப்பு, உடற்பயிற்சி மற்றும் தடுப்பூசி செலுத்த செல்லுதல் ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு்ள்ளது. அதே நேரம் தடுப்பூசி போட்டிருந்தாலும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

அதே நேரத்தில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பயணிக்கலாம் என்ற கட்டுப்பாடு 10 கிலோ மீட்டராக தளர்த்தப்பட்டுள்ளது. 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு நேரில் சென்று பயிலும் வகுப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய பணிகளுக்கு குழுவாக செல்லும் நபர்களின் எண்ணிக்கையும் 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பராமரிப்பு, புதுப்பித்தல், நடமாடும் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மெல்போர்ன் வாசிகள் கட்டாயம் விக்டோரியாவுக்கு பயணம் செய்யக் கூடாது.

விக்டோரியாவை பொறுத்த வரை, வீட்டை விட்டு வெளியே செல்ல போடப்பட்டு இருந்த 5 காரணங்கள் நீக்கப்பட்டு்ள்ளன. உரிய அனுமதி பெற்று முக்கிய தேவைகளுக்கு மட்டும் மெல்போர்ன்-க்கு பயணம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. விக்டோரியாவுக்குள் பயணம் செய்து கொள்ளலாம்.

New restrictions in Melbourne and Victoria Curfew extended to reduce the spread of the disease.அனைத்து வகுப்பு மாணவர்களும் பள்ளிக்குச் செல்லலாம். அலுவலகங்கள் 20 பணியாளர்கள் அல்லது 50 சதவீத பணியாளர்கள் இதில் எது குறைவோ அந்த அளவு மட்டுமே பணியாளர்களை கொண்டு இயங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வீடுகளுக்கு உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் வெளியில் செல்லும்போது முகக்கவசம் கட்டாயமில்லை என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் ஒன்றரை மீட்டர் தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டு்ள்ளது.

நூலகம் மற்றும் வெளிப்புற நிகழ்வுகளில் குறைந்தபட்சம் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். உள்ளரங்க நிகழ்வுகளில் 25 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும், அதேநேரத்தில் விக்டோரியா மற்றும் மெல்போர்னில் உள்ள அழகு நிலையங்கள் தங்கும் விடுதியுடன் கூடிய உணவகங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3vMNFmE