Breaking News

சிட்னி நகரில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று ஒரே நாளில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் புதிய கட்டுப்பாடுகளை சுகாதாரத்துறை விதித்துள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் இன்று மாலை 4 மணி முதல் அமலுக்கு வருவதாகவும் சுகாதாரத் துறை முதன்மை அதிகாரி மருத்துவர் கெர்ரி சாண்ட் தெரிவித்துள்ளார்.

புதிய கட்டுப்பாடுகள் படி கிரேட்டர் சிட்னி, சென்ட்ரல் கோஸ்ட், புளூ மவுண்டன், வூலங்காங், ஷெல் ஹார்பர் போன்ற பகுதிகளுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலங்கள், பணிபுரியும் இடங்கள், உள்அரங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு 5 பேருக்கு மேல் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

உள் அரங்குகளில் நின்றவாறு மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உள் அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பார்வையாளர்கள் பாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத வழிபாட்டு நிகழ்ச்சிகளை உள் அரங்குகளில் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விடுதிகளில், ஹோட்டல்களில் நடன நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

New restrictions have been imposed in Sydney due to an increase in the spread of corona infectionதிருமண சடங்குகளில் 20 பேருக்கு மிகாமல் நடனமாட எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடன வகுப்புகள், மற்றும் உடற்பயிற்சி கூடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், ஒரு வகுப்பில் 20 பேருக்கு மிகாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சிகள், துக்க நிகழ்வுகள், உள் அரங்கு நிகழ்ச்சிகள், வெளி அரங்கு நிகழ்ச்சிகளில் 4 சதுரடிக்கு ஒருவர் என்ற தனி நபர் இடைவெளி விதி மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.

வெளியரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் 50% பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது பொது போக்குவரத்தில் இருக்கைகளுக்கு இடையே இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சிட்னி, வெவர்லி, ராண்ட் விக், கனடா பே, பே சைட், வூலஹரா பகுடியிகளில் வசிப்பவர்கள் அத்தியாவசிய காரணமின்றி சிட்னியின் புற நகர் பகுதிகளுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு இன்று மாலை 4 மணி முதல் அமலுக்கு வருகிறது.