ஒரு வருடத்திற்கு பிறகு தெற்கு ஆஸ்திரேலியா தன்னுடைய எல்லையை வரும் நவம்பர் 23ஆம் தேதி திறக்கவுள்ளது.
மாகாணத்தில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி கொண்டவர்களின் எண்ணிக்கை 74 சதவீதமாக உள்ளது. வரும் வாரத்தில் இந்த எண்ணிக்கை 80 சதவீதமாக உயரும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தெற்கு ஆஸ்திரேலியாவின் பிரிமீயர் ஸ்டீவன் மார்சல், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தை தொடர்ந்தும் பல்வேறு தளர்வுகளை அரசு வழங்க தயாராக உள்ளது.
அதன் அடிப்படையில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு ஏற்படும் பட்சத்தில் அவர்கள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் அவசியம் இல்லை என்றும் ஏழு நாட்கள் தனிமையும் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வந்தாலே போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடன் 15 நிமிடங்களுக்குள்ளாகவே அவரை விட்டு விலகி இருந்தால் அவரை நேரடி தொடர்புடையவராக வகைப்படுத்த முடியாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதே நேரம் 15 நிமிடங்களுக்கு அதிகமாக தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடன் சந்தித்து பேசி இருந்தால் தனிமைப்படுத்துவது அவசியமென்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவின் இனி முழு ஊரடங்குக்கு வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளதாகவும் பிரிமீயர் மார்ஷெல் குறிப்பிட்டுள்ளார் . 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்பதால் இந்த மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதாகவும் இதனை கருத்தில் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் பிரிமியர் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் Nicola Spurrier குறிப்பிடும் போது மாகாணத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியோரின் சதவீதம் அதிகரித்து வந்தாலும் பூர்வகுடி மக்களில் இளைஞர்கள் பெரும்பான்மையானவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதது வருத்தத்தை அதிகரிப்பதாகவும், குறிப்பாக அடிலெய்ட் பகுதியில் அதிகவும் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவர்களுக்கும் தடுப்பூசி சென்று சேர்வதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Link Source: https://ab.co/3qLBMgX