Breaking News

ஆஸ்திரேலியாவில் தொற்று தொடர்பில் இருப்பவர்களை கண்காணிக்க தேசிய அளவில் புதிய திட்டம் : பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் டெல்டா வைரஸை தொடர்ந்து ஒமைக்ரான் வைரஸின் பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளது. நிலையில் தோற்று பாதிப்பில் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிப்பதற்கு தேசிய அளவிலான புதிய தீர்வை கண்டறிந்துள்ளதாக முதல் கட்டமாக 5 மாகாணங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இது அமல்படுத்த படுவதாகவும் பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.

தொற்று பாதித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நபர்களுக்கு உடனடியாக ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும், அதன் முடிவுகள் நெகட்டிவ் என வந்தாலும் அவர்கள் தொடர்ந்து ஏழு நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

New program to monitor those infected in Australia. Newly announced by Prime Minister Scott Morrison.அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் உடனடியாக பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், முடிவுகள் வரும் வரை 7 நாட்கள் தொடர்ந்து அவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு மருத்துவக் கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நடைமுறைகள் நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் ACT ஆகிய பானங்களில் முதற்கட்டமாக அமலுக்கு வருவதாகவும், தெற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே 10 நாட்கள் தனிமைப்படுத்தும் நடைமுறை அமலில் இருப்பதால் அது தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியா, தாஸ்மானியா, Northern Territory உள்ளிட்ட பகுதிகளிலும் ஜனவரி 1 முதல் இந்த புதிய தேசிய அளவிலான நடைமுறைகள் அமலுக்கு வருவதாகவும், தொற்று பாதித்தவர்கள் உடன் தொடர்பில் இருப்பவர்கள் தாமாக முன்வந்து தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேற்கண்ட புதிய நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கான தேசிய அளவிலான புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அவர்கள் அவர்கள் தொற்று பாதிப்பதற்கான வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Link Source: https://bit.ly/3mOhAYY